Dude: ``ஆயிரம் கேடயங்கள் வாங்கினாலும், ஆயிரம் மேடைகளில் ஏறினாலும்" - பிரதீப் ரங்கநாதன்| It Cannot Match the True Love of One Person" - Pradeep Ranganathan

Dude: “ஆயிரம் கேடயங்கள் வாங்கினாலும், ஆயிரம் மேடைகளில் ஏறினாலும்” – பிரதீப் ரங்கநாதன்| It Cannot Match the True Love of One Person” – Pradeep Ranganathan


பிரதீப் ரங்கநாதனின் `டியூட்” திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதனின் பர்சனல் உதவியாளர் சேகர் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

`டிராகன்’ திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் அனைவருக்கும் நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.

அன்றைய தினம் பிரதீபின் உதவியாளருக்கு அது வழங்கப்படாமல் மிஸ் ஆகியிருக்கிறது.

 `டூட்' படம்

`டூட்’ படம்

இதை நினைவில் வைத்து, சேகருக்காக கேக் வெட்டி நினைவுக் கேடயம் வழங்கி ஸ்பெஷலாகக் கொண்டாடியிருக்கிறார் பிரதீப்.

இதனால் நெகிழ்ந்து போன உதவியாளர் சேகர், “ஆயிரம் கேடயங்கள் வாங்கினாலும், ஆயிரம் மேடைகளில் ஏறினாலும், ஒருவரின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது.

அந்த ஒரு நாள் என் வாழ்வில் ஒரு இனிமையான கணமாக இருந்தது. இன்று அந்த நாளில் நடந்த என் இனிமையான கணங்களைப் பதிவிடுகிறேன். மிக்க நன்றி.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *