பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் இம்ரான் ஹாஷ்மி. ‘Dil Diya Hai’, ‘Tiger 3’, ‘Selfiee’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
45 வயதுடைய இவர் தனது சரியான டயட் முறைகளால் இன்னும் இளமையாகத் தோற்றமளித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது டயட் ப்ளான்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார் இம்ரான் ஹாஷ்மி. ” நான் மேற்கொள்ளும் டயட் ஒரு போரிங் ஆன டயட். ஏனென்றால் நான் ஒரே மாதிரியான உணவுகளைதான் எடுத்துக்கொள்வேன். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே எனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவேன். சில நேரங்களில் இரண்டு வேளை மட்டும்தான் சாப்பிடுவேன். அதேபோல உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
புரோடீனுக்காக சிக்கன் மற்றும் மீன்களை எடுத்துக்கொள்வேன். ஒரே மாதிரி சாப்பிட்டால் போர் அடிக்கும்தான். ஆனால் ஆயில் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கமுடியாது. அதனால் எனது உணவுப் பழக்கவழக்கங்களை இப்படியே வைத்துக்கொண்டேன். கடைசியாக ஒரு நல்ல பஞ்சாபி உணவை எப்போது சாப்பிட்டேன் என்றே மறந்துவிட்டேன். எனக்கு டயட்டில் சாலட் மட்டும் பிடிக்காது. அதை சாப்பிட்டால் ஏதோ மருந்து சாப்பிடுவதுபோல் இருக்கும்.
அதனால் அதை நான் சாப்பிட மாட்டேன். ஒரு படத்திற்கு நான் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதனால் வெறும் Brownie & Pizza வை மட்டுமே சாப்பிட்டு எடையை அதிகரித்தேன். ஆனால் அடுத்த படத்திற்கு எனக்கு எடையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
அதனால் இனி எக்காரணத்திற்காகவும் எடையை அதிகரிக்கக்கூடாது என்று நினைத்தேன். முக்கியமாக சர்க்கரையை எடுத்துக்கொள்ள மாட்டேன். அது விஷம் மாதிரி. எப்போதும் நம் எடையை சரியாக வைத்துக்கொண்டால் பிரச்னை இருக்காது” என்று கூறியிருக்கிறார்.