ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம், பாடல்கள் என பல ட்ராக்குகளில் பயணித்து வெற்றி பெற்று வருகிறார் தனுஷ். ராஜ்கிரண் நடித்த “பா.பாண்டி’யை தொடர்நது எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என பலரின் நடிப்பில் ‘ராயன்’ படத்தை இயக்கினார். அதனிடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து நான்காவது டைரக்ஷனாக ‘இட்லி கடை’யை இயக்கி வருகிறார்.
தனுஷின் ‘குபேரா’ படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இதற்கிடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கினார். தனுஷின் அக்கா மகன் பவிஷ் இதில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ரம்யா எனப் பலரும் நடித்து வருகின்றனர். தயாரிப்பும் தனுஷ்தான். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை இந்த ஆண்டு கடைசியில் வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தில் இதன் முதல் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் வெளியாகி வரவேற்பை அள்ளியது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று ‘இட்லி கடை’ என்ற படத்திற்கான அறிவிப்பு வெளியானது. ஆச்சரியமாக அதில் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கேமாராமேன் கிரண் கௌசிக், புரொடக்ஷன் டிசைனர் ஜாக்கி என தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றிந்தது. படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார். அசோக் செல்வன் நடிக்கிறார். ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பின் தனுஷுடன் நித்யாமேனன் ஜோடி சேர்ந்திருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவியது.
தனுஷின் 52வது படமாக (51வது படம் ‘குபேரா’) உருவாகி வரும் ‘இட்லி கடை’யின் படப்பிடிப்பு தேனி ஏரியாவில் நடந்து வருகிறது. படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் இணைந்துள்ளனர். இப்போது ராஜ்கிரண், தனுஷ், நித்யாமேனன் ஆகியோரின் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தில் அருண்விஜய் வில்லனாகவும், அசோக் செல்வன் தனுஷுன் தம்பியாகவும் கமிட் ஆகி உள்ளதாக சொல்கிறார்கள். அவர்களின் போர்ஷன் சென்னையில் படமாக உள்ளது.
தனுஷின் அப்பா கஸ்தூரிராஜாவின் ஊர் தேனி என்பதால், தேனி பகுதி மக்கள் தனுஷிற்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர் என்கின்றனர் படக்குழுவினர். இப்போது ஜாக்கியின் கைவண்ணத்தில் கடைத் தெருக்கள் செட் அமைத்து வருவதாக சொல்கின்றனர். ‘ராயன்’ படத்தில் தெறிக்க தெறிக்க வன்முறையும், ரத்தமும் பயமுறுத்தின. ஆனால், இந்தப் படம் ஃபீல்குட் படமாக உருவாகலாம் என்கின்றனர். ‘திருச்சிற்றம்பலம்’ போல ஒரு அழகான படமாக இந்தப் படம் உருவாகி வருவதாக சொல்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX