சின்னம்மை என்னும் சிக்கன்பாக்ஸ் வரும் போது உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்படி சாப்பிட வேண்டிய சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்று பார்க்கலாம்.

சிக்கன் பாக்ஸ் என்னும் சின்னம்மை தொற்று சில நேரங்களில் அதிக சங்கடத்தை உண்டாக்கலாம். இந்நிலையில் உடலானது வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கு கடினமான நிலையை கொண்டிருக்கலாம்.

chickenpox thedalweb Thedalweb அம்மை நோய் வரும்போது என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க!

நோய்த்தொற்றின் அறிகுறிகளை குறைப்பது. நீரேற்றம் மற்றூம் ஊட்டச்சத்து போன்றவற்றை போதுமான அளவு கொண்டிருப்பது என நீங்கள் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். சின்னம்மை தாக்கம் இருக்கும் போது நீங்கள் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

​சின்னம்மை என்றால் என்ன?

சிக்கன் பாக்ஸ் என்பது மிகவும் சங்கடமான தொற்று நோய். இது காய்ச்சல், குமட்டல், சோர்வு, தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் அதிகரிக்க செய்யும். உடலில் நமைச்சலை உண்டாக்க கூடும். சிவப்பு புடைப்புகள் கொப்புளங்கள், திட்டுகள் போன்று இருக்க கூடும்.

புண்கள், ஹெப்படைடிஸ், கணைய அழற்சி, நிமோனியா மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட கூடுதல் சிக்கல்களையும் உருவாக்கலாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

thedalweb tamil Thedalweb அம்மை நோய் வரும்போது என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க!

கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மென்மையான உணவுகள், உருளைக்கிழங்கு மசித்தது, வெண்ணெய், முட்டை பொரியல், பீன்ஸ் மற்றும் பயறு வகைகள், டோஃபு, கோழி வேகவைத்தது. மீன் ஏரி (குளத்தில் பிடித்தவை) போன்றவற்றை சாப்பிடலாம்.

குளிர்ந்த உணவுகளில் தயிர், பாலாடைக்கட்டி, மில்க் ஷேக், ஸ்மூத்திவைகள், மென்மையான உணவுகளில் அரிசி, பாஸ்தா, ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துகொள்ளலாம்

பழங்கள் மற்றூம் காய்கறிகள்

thedalweb tamil banana Thedalweb அம்மை நோய் வரும்போது என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க!

பெரும்பாலும் அம்மை கண்டவர்களுக்கு பழங்கள் நல்ல உணவாக பரிந்துரைக்கப்படும். ஆனால் பழங்கள் அமிலத்தன்மையற்றவையாக இருக்க வேண்டும்.

வாழைப்பழங்கள், முலாம்பழம், பெர்ரி பழம், பீச், ப்ரக்கோலி, காலே, வெள்ளரிக்காய், கீரை வகைகள் அடிக்கடி சேர்க்கலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அப்படியே சாலட் ஆக்கி கொடுக்கலாம். கீரைகளை பாசிப்பயறு சேர்த்து கடைந்து அப்படியே சாதத்தில் கலந்து சாப்பிட கொடுக்கலாம்.

​ஏன் திரவ ஆகாரங்கள் அவசியம்

water Thedalweb அம்மை நோய் வரும்போது என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க!

அம்மை கண்டவர்கள் உடலில் வைரஸ் எதிர்த்து போராடவும் விரைவாகவும் குணமடைய திரவ ஆகாரம் உதவுகிறது. ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் போன்று உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் முக்கியம்

.

இது தொண்டை மற்றும் வாய் பகுதியில் அதிக தாக்கத்தை உண்டாக்க கூடும் என்பதால் உணவுகள் மற்றூம் பானங்களை எடுத்துகொள்வது சிரமமாக இருக்கலாம்.இதன் விளைவாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிப்பு இன்னும் அதிகமாக கூடும்.

சேர்க்கவேண்டிய திரவபானங்கள்

elaneer Thedalweb அம்மை நோய் வரும்போது என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க!

தண்ணீர், இளநீர், மூலிகை தேநீர், சர்க்கரை அளவு குறைந்த பானங்கள் எலக்ட்ரோலைட் உட்செலுத்தப்பட்ட பானங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்கலாம். கோடைக் காலங்களில் நுங்கு அதிகமாக கிடைக்கும். இதை தோல் நிக்கி சிறூதுண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து கொடுக்கலாம். அப்படியே குளுமையாக உடல் உஷ்ணத்தை தணித்து வைத்திருக்கும்.

திரவபானங்கள் நல்லது என்று எல்லாவற்றையும் சேர்த்துவிட முடியாது. அதிக சர்க்கரை சேர்த்த பானங்கள், பழச்சாறுகள், கொட்டை வடிவ நீர், சோடா, ஆல்கஹால், ஆற்றல் பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

எவ்வளவு வரை குடிக்கலாம்

water dringing Thedalweb அம்மை நோய் வரும்போது என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க!
  • இதைவயது வாரியாக பிரித்து சொல்லலாம்.
  • ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 0. 7 லிட்டர்,
  • 7 முதல் 12 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 0.8 லிட்டர்,
  • 1 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1. 3லிட்டர்,
  • 4 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1. 7 லிட்டர்,
  • 9 வயது முதல் 13 வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு 2.
  • 1லிட்டர் அளவும், ஆண்களுக்கு 2. 4 லிட்டர் அளவும்,
  • 14 முதல் 18 வயது வரை உள்ள பெண்களுக்கு 2.3 லிட்டர் அளவும் ஆண்களுக்கு 3.3 லிட்டர் அளவும்,
  • 19 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு 2. 7 லிட்டர் வரையிலும், ஆண்களுக்கு 3. 7 லிட்டர் அளவும் திரவ ஆகாரம் தேவை. இது உணவு மற்றூம் திரவ ஆகாரம் இரண்டிலிருந்தும் பெறக்கூடியது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சின்னம்மை பிரச்சனை இருக்கும் போது வாய் மற்றும் அதை சுற்றி இருக்கும் கொப்புளங்களை அனுபவிக்கும் நிலையில் இது அந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் மேலும் அறிகுறிகளை மோசமாக்கும். அப்போது சில உணவுகள் இதன் தரத்தை மோசமாக்க கூடும். அப்படியான உணவை நீங்கள் தவிர்ப்பதே நல்லது.

thedalweb tamil Thedalweb அம்மை நோய் வரும்போது என்ன சாப்பிடலாம் ? என்ன சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கங்க!

காரமான உணவுகள், பச்சை மிளகாய், பூண்டு, அமிலம் நிறைந்த உணவுகள், திராட்சை, அன்னாசி, தக்காளி, சிட்ரஸ் பழங்கள், வினிகர் சேர்த்திருக்கும் ஊறூகாய்கள், உப்பு நிறைந்த உணவுகள், சிப்ஸ் வகைகள், சூப், காய்கறி சாறுகள், மொரமொரப்பான உணவுகள், கொட்டைகள், விதைகள், பாப்கார்ன் வகையறாக்கள் ,எண்ணெயில் பொரித்த உணவுகள் என எல்லாமே தவிர்க்க வேண்டியவை.