பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். தற்போது படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா பிரசாந்த் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மீனாட்சி செளத்ரி பேசியப்போது, “எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது கரியரின் தொடக்கத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கு இன்டஸ்ட்ரியில் நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. விஜய் சார் மிகவும் அமைதியானவர். அவர் எப்போதும் ஜென் நிலையில் இருப்பார். எப்போதும் சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். சூட்டிங் தொடங்கிவிட்டால் அவர் வேறமாதிரியான ஒரு நபராக இருப்பார். கதாபாத்திரத்திற்கு ஏற்றமாதிரி மாறிவிடுவார்.
விஜய் மாதிரியான ஒருவரை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு டிசிப்ளின் மற்றும் டெடிகேஷன் உடன் நடந்துகொள்வார். அதனால்தான் அவர் மிகப்பெரிய ஸ்டாராக இருக்கிறார். விஜய் சாருடன் இனணந்து நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று படக்குழுவிற்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.