GOAT திரைப்படம் இன்று காலையில் வெளியாகியிருக்கிறது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மினாக்ஷி சௌத்ரி, ஸ்நேகா, லைலா எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.
GOAT திரைப்படத்தில் எக்கச்சக்க சர்ப்ரைஸ்கள் இருப்பதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், படம் வெளியான உடனேயே யார் யார் கேமியோ செய்திருக்கின்றனர்? சிவகார்த்திகேயன் வருகிறாரா, ஏ.ஐயில் விஜயகாந்த் எப்படியிருக்கிறார், தோனி இருக்கிறாரா எனப் பல கேள்விகளுக்கும் விடையறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
படம் வெளியாகவுள்ள நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வெங்கட் பிரபு ஒரு ட்வீடை பதிவிட்டார்.