ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ‘புதிய கீதை’ படத்திற்குப் பிறகு, விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.
தவிர, வெங்கட் பிரபு படத்தில் வரும் ஆஸ்தான நடிகர்களான வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவி இருக்கிறது. தமிழகத்தில் 9 மணிக்கு ‘GOAT’ திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களில் 4 மணிக்கே படம் திரையிடப்பட்டிருக்கிறது.