He spends a lot of time with heroines, he is not a good husband: Actor Govinda’s wife-அதிகமான நேரத்தை ஹீரோயினுடன் செலவிடுவார், அவர் நல்லகணவன் கிடையாது: நடிகர் கோவிந்தா மனைவி

✍️ |
He spends a lot of time with heroines, he is not a good husband: Actor Govinda's wife-அதிகமான நேரத்தை ஹீரோயினுடன் செலவிடுவார், அவர் நல்லகணவன் கிடையாது: நடிகர் கோவிந்தா மனைவி


பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும் அவரின் மனைவி சுனிதா அஹுஜாவுக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து கொண்டே இருக்கிறது. சுனிதா தனது கணவன் மீது புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவர்களது மோதல் விவாகரத்து வரை சென்றது. ஆனால் இறுதியில் விவாகரத்து மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். இப்போது இருவரும் சமரசமாகி இருக்கின்றனர். தற்போது சுனிதா அளித்திருக்கும் பேட்டி அவர்களுக்குள் இப்போதும் கருத்து வேறுபாடு இருப்பதை உறுதிபடுத்தி இருக்கிறது.

சுனிதா அளித்துள்ள பேட்டியில், “‘கோவிந்தா எனக்கு நல்ல கணவராக இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகும், இளமைப் பருவத்தில் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது பொருத்தமானதல்ல. நீங்கள் உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஒருவர் இளமையாக இருக்கும்போது, ​​தவறுகள் செய்வது பரவாயில்லை. நான் கூடஅவற்றைச் செய்திருக்கிறேன்.

கோவிந்தாவும் அதை செய்திருக்கிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, ​​அந்தத் தவறுகளை தொடர்வது சரியல்ல. மேலும், அழகான குடும்பம், அன்பான மனைவி மற்றும் அற்புதமான குழந்தைகள் இருக்கும்போது ஏன் இதுபோன்ற தவறுகளைச் செய்ய வேண்டும்?”என்று தெரிவித்தார்.

கோவிந்தாவுக்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக பேசப்படுவது குறித்து கேட்டதற்கு, ”நான் இது குறித்து பல முறை விளக்கமளித்து இருக்கிறேன். நான் இதுவரை அவரை அது போன்று பார்க்கவில்லை. அவரை கையும் களவுமாக பிடிக்கவும் இல்லை. எனவே அது பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. அவருக்கு மராத்தி நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. கோவிந்தா ஒரு ஹீரோ. அவரைப்பற்றி நான் என்ன சொல்ல?. மனைவியை விட அதிகமான நேரத்தை ஹீரோயினுடன் செலவிடுகிறார்.

ஒரு நட்சத்திரத்தின் மனைவியாக இருக்க மிகவும் வலிமையான பெண்ணாக இருப்பது அவசியம். இதயத்தை கல்லைப் போல கடினமாக வைத்திருக்கவேண்டும். இதை உணர எனக்கு 38 வருட திருமண வாழ்க்கை தேவைப்பட்டது. சிறுவயதில் எனக்குப் புரியவில்லை. கோவிந்தா ஒரு நல்ல மகனாகவும், நல்ல சகோதரராகவும் இருந்துள்ளார். ஆனால் நல்ல கணவராக இல்லை. அதனால், அடுத்த பிறவியில் அவரைக் கணவராகப் பெற விரும்பவில்லை” என்றும் சுனிதா ஒப்புக்கொண்டார். கோவிந்தா பல ஆண்டுகளாக தனது மனைவியுடன் சேர்ந்து வாழாமல் மனைவி அருகில் இருக்கும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இப்போது சுனிதா புதிய யூடியூப் சேனல் ஒன்றை வைத்து வருமானம் ஈட்டி வருகிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…