நடிகை மீனா, “எங்களுக்கிடையேயான போட்டி மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. சௌந்தர்யா ஒரு அற்புதமான நபர்.
அவர் என் நெருங்கிய நண்பர். ஆனால், அவரது மரணச் செய்தியைக் கேட்டபோது, நான் அதிர்ந்துபோனேன்.
அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. உண்மையில், அன்று நான் சௌந்தர்யாவுடன் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

என்னையும் அந்தப் பிரச்சாரத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், எனக்கு அரசியல் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் பிடிக்காது.
நான் படப்பிடிப்பில் இருப்பதாகச் சொல்லி அதைத் தவிர்த்தேன். ஆனால், அந்த சம்பவம் நடந்ததை அறிந்தபோது, மனமுடைந்து போனேன்.” என்று சொன்னார்.