கார்த்தி நடித்திருக்கும் ‘மெய்யழகன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
’96’ பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூர்யா – ஜோதிகாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. நாளை வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் சூர்யா, கார்த்தியுடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
‘மெய்யழகன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியான சமயத்தில் அதனைப் பாராட்டி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ” அன்பான டிரைலர் இது! மெய்யழகன் திரைப்படத்திற்கு கார்த்தி சாருக்கும், அரவிந்த்சாமி சாருக்கும் வாழ்த்துகள். சூர்யா சாருக்கும், பிரேம் குமார் சாருக்கும் காதலும் மரியாதையும்!” என பதிவிட்டிருந்தார் டொவினோ தாமஸ்.
இன்று சூர்யா, கார்த்தியுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ” நடிகராக வேண்டும் என வேட்கையுடன் சுற்றிய காலங்களில் இவர்கள் இருவரும் தனி வழியைக் காட்டியிருக்கிறார்கள். ஊக்கம் கொள்வதற்கு பல டோசேஜ்களை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இன்று இந்த இரு அருமையான நடிகர்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையில் நிற்கிறேன். என்னுடைய பயணத்தில் இவர்கள் இருவரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். மெய்யழகனுக்கு வாழ்த்துகள்!” என பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX