வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’.
இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என்று பலர் நடித்திருக்கின்றனர்.
காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 19 இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப்.9) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, “சில இயக்குநர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்.
அவர்கள் தங்களுடைய துணை இயக்குநர்களுக்குக் கூட கதை சொல்வது இல்லையாம். எனது ரகசியம் இவர் வழியாக வெளியே போய்விட்டால் என்ன பண்ணுவது என்று சிந்திக்கிறார்களாம்.
“படையாண்ட மாவீரா’ படத்தில் உள்ள நம்பிக்கை என்னவென்றால் இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வேர்வை, ஒரு உண்மையான போராளியின் போராட்டக்கதை. அதனால் இதில் கற்பனைக்கு இடமில்லை.