தமிழில் அடுத்து ‘சிங்கா நல்லூர் சிக்னல்’ என்ற படமும் கைவசம் வைத்துள்ளார். ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி பின்னும் கதை இது. அறிமுக இயக்குநர் ஜே.எம்.ராஜா இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘உள்ளம் கொள்ளை போகுதே” படத்திற்கு பின், பிரபுதேவாவுடன் இப்போதுதான் யுவன் கைக்கோர்க்கிறார் என்கிறார்கள்.
இவை தவிர பாலிவுட்டில் கஜோலுடன் ‘மகாராக்னி – குயின் ஆஃப் குயின்ஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அட்லியின் ஆஸ்தான கேமராமனேன் ஜி.கே. விஷ்ணு, ஒளிப்பதிவு செய்து வருகிறார். நஸ்ரூதின் ஷா இதில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பும் மும்பையில் மும்முரமாக நடந்து வருகிறது. பாலிவுட்டில் ஹிமேஷ் ரேஷமையா நடிக்கும் ‘படாஸ் ரவி குமார்’ படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார் பிரபு தேவா.
போதும் போதும் என சொல்லும் அளவுக்கு நீள்கிறது பிரபு தேவாவின் லைன் அப்-கள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX