“‘Pushing the limits’. நான் ஒரு கட்டத்திற்குள் அடங்கிவிட விரும்பவில்லை” – அஜித் | Ajith Kumar speech about Motor Sports racing experiences

✍️ |
"'Pushing the limits'. நான் ஒரு கட்டத்திற்குள் அடங்கிவிட விரும்பவில்லை" - அஜித் | Ajith Kumar speech about Motor Sports racing experiences


கேள்வி: ஒரு சூப்பர் ஸ்டாராக சினிமாவில் வாழ்ந்துவிட்டு இப்போது ரேஸிங்கில் உதவியாளர்கள் இல்லாமல் நீங்களாகவே உங்கள் வேலைகளைச் செய்கிறீர்கள், சிறிய அறையில் உடை மற்றுகிறீர்கள், சமைக்கிறீர்கள், பெரிதாக இங்கு வசதிகள் இல்லை. வசதியாக வாழ்ந்துவிட்டு இப்போது எல்லாமே நீங்களாவே செய்துகொண்டிருப்பது எப்படி இருக்கிறது?

அஜித் குமார்: நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். அப்போது நானே என் வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். எந்தவொரு உதவியாளர்களும், வசதிகளும் எனக்கில்லை. வசதியான வாழ்க்கையெல்லாம் அதன்பிறகுதான் வந்தது.

அஜித் குமார்

அஜித் குமார்

என் வேலைகளைச் செய்ய எனக்கென்று உதயவியாளர்கள் வந்தபிறகு எனக்கு நேரம் மிச்சமானது. ஆனால் காலப்போக்கில் எல்லாவற்றிற்கும் அவர்களை நம்பியிருக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவீர்கள். அது ஆபாத்தானது.

இப்போது என் வேலைகளை நானே செய்துகொள்கிறேன், எல்லாவற்றையும் நானே செய்வதை ரசிக்கிறேன். உங்களைச் சுற்றி அதிகமானவர்கள் இருந்தால், வாழ்க்கை கடினமாகிவிடும். அதனால், முடிந்தவரை சுயமாக இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.

இப்போது மீண்டும் எனது பால்ய காலத்திற்குச் சென்று எனது வாழ்க்கையை மீண்டும் இன்னொரு இடத்தில் இருந்து தொடங்குகிறேன். நானாக சமைத்துக் கொள்வது, நானே என் வேலைகளைப் பார்த்துக் கொள்வது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அது எனக்குப் பிடித்திருக்கிறது. மக்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் நானும் இருக்க ஆசைப்படுகிறேன்” என்று பேசியிருக்கிறார் அஜித்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!" - கங்கை அமரன் |" Me and Roja speaks politics!" - Gangai Amaran

“நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!” – கங்கை அமரன் |” Me and Roja speaks politics!” – Gangai Amaran

நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும்…

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின்…

Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?

Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல்…