தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
2009 ஆம் ஆண்டு கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் தமிழில் `தடையற தாக்க’, `புத்தகம்’, `என்னமோ ஏதோ’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனைத்தொடர்ந்து `ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு கார்த்தியுடன் இனணந்து ‘தீரன்’ படத்தில் நடித்திருந்தார். தவிர சூர்யாவுடன் ‘NGK’ படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்திருந்தார். தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் சில இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தவறவிட்ட படங்கள் குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “நான் திரைத்துறைக்கு அறிமுகமாவதற்கு முன் பிரபாஸ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தேன்.
நான்கு நாட்கள் அப்படத்தில் நடிக்கவும் செய்திருந்தேன். ஆனால் அப்படத்தில் இருந்து திடீரென்று என்னை நீக்கிவிட்டார்கள். எனக்கு சரியான தகவல் கூட அவர்கள் கொடுக்கவில்லை” என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய ராகுல் ப்ரீத் சிங், சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் இணைந்து எம். எஸ் தோனியின் பயோபிக் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் கூறியிருக்கிறார். ” எம். எஸ் தோனியின் பயோபிக் படத்தில் திஷா பதானி கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டியிருந்தது.
காஸ்ட்யூம் தேர்வு மற்றும் ஸ்கிரிப்ட் ரீடிங் எல்லாம் செய்தேன். ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு தேதி மாறியதால் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அப்போது நான் ராம் சரணுடன் இணைந்து புரூஸ் லீ: தி ஃபைட்டர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு நல்ல படத்தை நான் தவறவிட்டுவிட்டேன் என்று அழுதேன்” என்று கூறியிருக்கிறார்.