sabesh: “என்னுடைய படங்களில் எல்லாம் பணியாற்றும்போது சபேஷ் அதிகமாகப் பேசி பார்த்தது இல்லை” – இயக்குநர் பாக்யராஜ் இரங்கல் | “Sabesh never talked much while working on my films” – Director Bhagyaraj’s condolence

✍️ |
sabesh: "என்னுடைய படங்களில் எல்லாம் பணியாற்றும்போது சபேஷ் அதிகமாகப் பேசி பார்த்தது இல்லை" - இயக்குநர் பாக்யராஜ் இரங்கல் | "Sabesh never talked much while working on my films" - Director Bhagyaraj's condolence


68 வயதாகும் சபேஷ் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பாக்யராஜ், சபேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாக்யராஜ், “திறமைசாலிகள் நம்மைவிட்டு பிரியும்போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

சபேஷ் அவர்கள் ரொம்ப அமைதியாக இருப்பார். என்னுடைய படங்களில் எல்லாம் பணியாற்றும்போது அவர் அதிகமாகப் பேசி பார்த்தது இல்லை.

அதேபோல் தேவா சார் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளின் ஒற்றுமை எல்லோருக்கும் நெகிழ்வான ஒரு விஷயமாக இருக்கும்.

அவர் படங்களுக்கு இசை அமைத்தது மட்டும் அல்லாமல்… ரஹ்மான் எங்கையாவது வெளியூர் சென்றால் சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு திறமை இருந்தது.

அவரின் இறப்பு மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!" - கங்கை அமரன் |" Me and Roja speaks politics!" - Gangai Amaran

“நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!” – கங்கை அமரன் |” Me and Roja speaks politics!” – Gangai Amaran

நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும்…

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின்…

Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?

Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல்…