அந்தப் படத்துல அஜித், ரோஜாப்பூ பொக்கேவோட ஷாலினிகிட்ட தன் காதலைச் சொல்லுவார். அந்த ரீல் சீனை ரியல் சீனாக மாத்த நினைச்ச அஜித், நிஜமாவே போக்கே கொடுத்து, ஷாலினிகிட்ட தன் காதலைச் சொல்லிருக்கார். அந்தப் படத்துல வரும் ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ பாடலை மையமா வெச்சு, லவ் லெட்டரை எழுதி ஷாலினிகிட்ட கொடுத்திருக்கார் அஜித். ஷாலினிகிட்ட இருந்தும் கிரீன் சிக்னல் கிடைக்க, இவங்க காதல் பலமாகியிருக்கு.
‘அமர்க்களம்’ படத்துக்குப் பிறகு, டைரக்டர் மணிரத்னம் இயக்கத்துல நடிகர் மாதவனோட இவங்க சேர்ந்து நடிச்ச படம் ‘அலைபாயுதே’. அந்த 2000-ம் வருஷம், ஷாலினி நடிச்ச ‘சக்தி’ங்கிற கேரக்டர் நேம், தமிழ்நாட்டுல சென்சேஷனா ஒலிச்சது. மாதவனுடன் ரொமான்ஸ் காட்சிகளாகட்டும், கல்யாணத்துக்குப் பிறகான செல்லச் சண்டைகள், ஈகோ க்ளாஷ்கள்னு பலவிதமான உணர்வுகளையும் நேர்த்தியா கையாண்டு, நடிப்பு ராட்சசியா இந்தப் படத்துல ஷாலினி பெர்ஃபார்ம் பண்ணிருப்பாங்க. இந்தப் படம் ரிலீஸாகி, அடுத்த பத்தே நாள்கள்ல அஜித்தும் ஷாலினியும் திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. பின்னர், பத்து மாதங்களுக்குப் பிறகுதான், நடிகர் பிரசாந்துடன் ஷாலினி சேர்ந்து நடிச்ச ‘பிரியாத வரம் வேண்டும்’ படம் ரிலீஸ் ஆச்சு. ஷாலினி நடிச்ச கடைசிப் படமான இதுவும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுதான்.
தமிழ் மற்றும் மலையாளத்துல லவ் சப்ஜெக்ட் படங்கள்ல ஹீரோயினா நடிச்சாலும், கிசுகிசு, சர்ச்சைன்னு எதுலயுமே ஷாலினியின் பெயர் அடிபடலை. தன் பர்சனல் மற்றும் புரொஃபஷனல்னு ரெண்டு ஏரியாவையும் கவனமாவும் கண்ணியமாவும் பக்குவத்துடனும் ஷாலினி பேலன்ஸ் பண்ணாங்க. தன் யதார்த்த நடிப்பால ஃபேமிலி மற்றும் யூத் ஆடியன்ஸ் மனசுல சிம்மாசனமிட்டு உட்கார்ந்த ஷாலினி, ஹீரேயினா அஞ்சே தமிழ்ப் படங்களுடன் ஷார்ட் பீரியட் மட்டுமே சினிமா களத்துல நடிச்சிருந்தாலும், டாப் ஸ்டாராதான் ஜொலிச்சாங்க. எத்தனையோ நடிகைகள், பிரேக்குக்குப் பிறகு கம்பேக் கொடுத்திருந்தாலும், இப்போவரைக்கும் ‘நோ ரீ-என்ட்ரி’ங்கிறதுல ஷாலினி உறுதியா இருக்காங்க.