அதில் சித்தார்த், “ஐந்து நிமிடத்திற்குள் நான் நிறைய தவறுகளைச் செய்துவிடுவேன். அதனால் ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை விட ‘ஸாரி’ என்ற வார்த்தையைத்தான் அதிதியிடம் அதிகம் பயன்படுத்துவேன். நான் அவரிடம் பேசும் வார்த்தைகளில் தொண்ணூறு சதவீதம் ஸாரி என்ற வார்த்தையும் மீதமுள்ள பத்து சதவீதம் நன்றி என்ற வார்த்தையாகவும்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
காலையில் அதிதி எழுந்த உடன் செய்யும் முதல் விஷயம் என்னவாக இருக்கும் என்று சித்தார்த்திடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சித்தார்த், “அதிதி எழுந்தவுடன் என்னுடைய விருப்பம் இல்லாமல் என்னை எழுப்பி விட்டுருவார். எனது நாள் தொடங்கிவிட்டது என நானும் அழுகையுடன் எழுந்திருப்பேன். ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாயைப் பறித்துக்கொண்டதுபோல் அவர் என்னைப் பார்த்து சந்தோஷப்படுவார்” என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX