2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது.
மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பூ, நடிகர் சிவகார்த்திகேயனைப் பேட்டி எடுத்திருகிறார். அதில் சிவகார்த்திகேயன் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ” எந்தவொரு வாய்ப்பு வந்தாலும் அதற்காக 100% உழைத்தேன்.
எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை வைத்து மக்களை மகிழ்விக்கத் தொடங்கினேன். மக்கள் என்னை தொலைக்காட்சியில் பொழுதுபோக்காளராக பார்த்தார்கள். அதையே திரையுலகிலும் செய்யத் தொடங்கினேன். தொலைக்காட்சியோ, சினிமாவோ நகைச்சுவையைத்தான் எனது கவசமாக பயன்படுத்தினேன்.
அது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை உணர்ந்தேன். ஆரம்பத்தில் இருந்து சினிமாதான் என் ஆசை. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தேன். அது தான் திரையுலகில் நுழைவதற்கு வாய்ப்பு கொடுத்தது. நான் மிகப் பெரிய ரஜினி சார் ரசிகன்.
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் இரண்டு நாட்களுக்குள் திரையரங்குகளில் பார்த்துவிடுவேன். 2006-ம் ஆண்டு முதல் எந்தவொரு படத்தையும் திருட்டு பதிப்பில் பார்த்ததில்லை. அந்தளவுக்கு சினிமாவை நேசிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras