கன்னட நடிகர் கனேஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘சகத்’ என்ற திரைப்படம்தான் இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம். அதன் பிறகு 2022-ல் கன்னட நடிகர் தன்வீர் கெளடா, நடிகை ஶ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘பை 2 லவ்’தான் இந்த நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படம். இது போன்ற சின்ன திரைப்படங்களை தயாரித்து வந்த இந்த நிறுவனம் மூன்றாவது திரைப்படத்தையே பெரிய நட்சத்திரப் பட்டாளங்களை வைத்து எடுத்தது. துருவ் சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கே.டி.டெவில்’ திரைப்படம்தான் இந்த நிறுவனத்தின் மூன்றாவது திரைப்படம்.
அடுத்ததாக இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ திரைப்படம்தான் இதன் நான்காவது படம். ஐந்தாவது திரைப்படம்தான் அ.வினோத் இயக்கும் விஜய்யின் 69-வது திரைப்படம். ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தின் உச்ச நட்சத்திரங்களின் படங்களை தயாரிக்கிறது இந்த நிறுவனம். இதுமட்டுமல்ல விக்ராந்த் ரோனா, சப்த சாகரடச்சல்லோ, 777 சார்லி, மார்டின் போன்ற திரைப்படங்களுக்கு ஃபண்டிங்கும் செய்திருக்கிறது. இதை தாண்டி கல்கி, அனிமல், சீதா ராமம், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களை கன்னட திரையரங்குகளுக்கு விநியோகமும் செய்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…