இறுதியாக இந்த சீரிஸ் தொடர்பாகப் பேசிய நடிகர் சேத்தன், “ஒரு நாள் திடீர்னு நாகா சார் கால் பண்ணிக் கூப்பிட்டாங்க. நானும் தேவதர்ஷினியும் போய் மீட் பண்ணினோம். நாங்க ரெண்டு பேரும் ஏற்கெனவே ‘பஞ்சாயத்’ சீரிஸை பார்த்துட்டு அடுத்த சீசன் எப்போ வரும்னு காத்திட்டிருக்கோம். அந்த நேரத்துல நாகா சார் அதே சீரிஸோட ரீமேக்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. கொஞ்சம் பொறுப்பாக இந்த ரீமேக்கை கையாளணும். ஏன்னா, அது இந்தில ஒரு பெரிய ஹிட்டான வெப் சீரிஸ் அதை நம்ம ரீமேக் பண்ணும்போது எதாவது சரியாக வரலைனா எல்லோரும் ‘இது தேவையா?’னு திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா, இந்த சீரிஸை இயக்குறது நாகா சார் ஆச்சே.
உடனடியாக ஓகே சொல்லிட்டோம். ‘மர்மதேசம்’ தொடர்ல இவருடைய இயக்கத்துல நடிக்கும்போது நான் சில படங்கள் பண்ணியிருந்தேன். அந்த தொடர்ல நடிக்க போகும்போது பழைய விஷயங்கள் எல்லாத்தையும் அழிச்சுட்டு புதுசா ஒன்னு நாகா சார் சொல்லிக் கொடுத்தாரு. அந்த தொடருக்குப் பிறகு சில டேக்ல நடிச்சு முடிச்சிடுவேன். ஆனா இப்போ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்குற மாதிரி இந்த சீரிஸ்ல 20 டேக் வாங்கினேன்” எனப் பேசி முடித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…