Vaazhai : `அற்புதமான படம், தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு..!' - வாழை படத்தைப் பாராட்டிய ரஜினி | rajini appreciates mari selvaraj vaazhai movie

Vaazhai : `அற்புதமான படம், தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு..!’ – வாழை படத்தைப் பாராட்டிய ரஜினி | rajini appreciates mari selvaraj vaazhai movie


அந்த வகையில், தற்போது வாழை படத்தைப் பார்த்துவிட்டு அதனை பாராட்டி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ரஜினி. அந்தப் பதிவில் அவர், “மாரி செல்வராஜின் வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்ட்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

Rajini appreciates 'Vaazhai'Rajini appreciates 'Vaazhai'

Rajini appreciates ‘Vaazhai’

கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *