Vetrimaaran: தமிழ் பேசிய சினிமாவை, தமிழ் சினிமாவாக மாற்றியவர் பாரதிராஜா – 5 நாட்கள் விழா எடுக்கும் வெற்றிமாறன். director vetrimaaran’s iifc conducted a event for director bharathiraja for vels univercity

✍️ |
Vetrimaaran: தமிழ் பேசிய சினிமாவை, தமிழ் சினிமாவாக மாற்றியவர் பாரதிராஜா - 5 நாட்கள் விழா எடுக்கும் வெற்றிமாறன். director vetrimaaran's iifc conducted a event for director bharathiraja for vels univercity


இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனமான (iifc), வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சித் தகவலியல் துறையுடன் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவைக் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்துகிறது. “தமிழ் பேசிய சினிமாவை தமிழ் சினிமாவாக மாற்றிய பாரதிராஜா’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் பாரதிராஜாவின் படங்கள் திரையிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படம் குறித்த விவாதங்களும், உரையாடலும் நடை பெறுகிறது.

காலத்தை வென்ற காவிய படைப்புகளை தந்த கலை ஆளுமையை கொண்டாடும் வகையில் இயக்குநர் வெற்றிமாறனின் ஐ.ஐ.எஃப்.சி, சில மாதங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலு மகேந்திராவின் படைப்புகளை கொண்டாடியது. அதனை தொடர்ந்து இப்போது இயக்குநர் பாராதிராஜாவிற்கான நிகழ்வை கொண்டாவிருக்கிறது.

விழா ஒன்றில்

விழா ஒன்றில்

வருகிற நவம்பர் 7ம் தேதியில் தொடங்கும் இந்நிகழ்வு, வரும் 11ம் தேதி வரை நடைக்கிறது. தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜாவின் ’16 வயதினிலே’, ‘கிழேக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓயவதில்லை’, ‘மண் வாசனை’, ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘கிழக்கு சீமையிலே’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

மேற்கண்ட படங்களின் திரையிடலைத் தொடர்ந்து அதில் இடம்பெற்ற திரைக் கலைஞர்கள் பங்கேற்று, பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். நிகழ்வு நடக்கும் அத்தனை நாட்களிலும் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொள்கிறார். இயக்குநர் அமீர், சத்யராஜ், ‘கடலோர கவிதைகள்’ நாயகி ரேகா, ஆர்.கே.செல்வமணி , சேரன் உள்பட பலரும் பங்கேற்கிறார்கள்.

இளையராஜா, பாரதிராஜா

இளையராஜா, பாரதிராஜா
படம்: ஸ்டில்ஸ் ரவி

இது குறித்து விசாரிக்கையில், ”தலைசிறந்த கதைசொல்லியான இயக்குநர் பாரதிராஜாவைக் கொண்டாடும் விதமாகவும் அவருக்கு நாம் செலுத்தும் முதல் மரியாதையாகவும் இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது. IIFCயின் “தடம் பதித்த படைப்பாளுமைகளை கொண்டாடுவோம்” என்ற நிகழ்ச்சி தொடரில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இயக்குநரின் படங்களின் திரையிடல்கள், பங்கு பெற்றவர்களின் உரையாடல்கள், படங்களைத் தெரிவு செய்தல் முதலிய சுவாரஸ்யமான நிகழ்வுகள் இதில் இடம் பெறும்.

16 வயதினிலே #VikatanReview

16 வயதினிலே #VikatanReview

நம் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மாபெரும் படைப்பாளியின் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமையுணர்ச்சி இது. நம் பாசத்திற்குரிய பாரதிராஜாவிற்காக இந்த நிகழ்வை வெற்றிமாறனின் ஆய்வகம் எடுக்கிறது” என்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!" - கங்கை அமரன் |" Me and Roja speaks politics!" - Gangai Amaran

“நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!” – கங்கை அமரன் |” Me and Roja speaks politics!” – Gangai Amaran

நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும்…

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின்…

Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?

Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல்…