Vettaiyan: "ரஜினியின் எனர்ஜி ரகசியம்; படையப்பா மொமென்ட்" - நெகிழ்ந்த 'வேட்டையன்' கதாநாயகிகள்

Vettaiyan: "ரஜினியின் எனர்ஜி ரகசியம்; படையப்பா மொமென்ட்" – நெகிழ்ந்த 'வேட்டையன்' கதாநாயகிகள்


த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸாகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ரானா, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன. இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகை துஷாரா விஜயன், “நான் கனவு கண்டிருக்கேன். ஆனால் இது கனவை விட ரொம்ப பெரிய விஷயம். சும்மாவா சொன்னாங்க…. ‘சூப்பர் ஸ்டார் யாரு’னு கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்னு… நான் எப்போ எங்க போகுறதுக்கு கார்ல ஏறுனாலும் ‘வெற்றி கொடி கட்டு’ பாடலைதான் போடுவேன். இன்னைக்கு இது என்னுடைய படையப்பா மொமென்ட்.” என்றார் மகிழ்ச்சியுடன்.

GX7JXajW4AAcAf0 Thedalweb Vettaiyan: "ரஜினியின் எனர்ஜி ரகசியம்; படையப்பா மொமென்ட்" - நெகிழ்ந்த 'வேட்டையன்' கதாநாயகிகள்
Dushara Vijayan

இவரைத் தொடர்ந்து வந்து பேசிய ரித்திகா சிங், “என்னுடைய சிறு வயதில் நான் கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும்போது ‘நீ வருங்காலத்தில் ரஜினி சார், அமிதாப் சார் நடிக்கும் படத்தில் நடிகப்போகிறாய்’ எனக் கூறியிருந்தால் நான் நம்பியிருக்கவே மாட்டேன். என்னுடைய தமிழ் மக்களுக்கு மிக பெரிய நன்றி. நிறைய இடங்களுக்கு பயிற்சிக்குப் போகும்போது பணம் இல்லாமல் இருந்திருக்கேன். அந்த இடத்தில் இருந்து இப்போது இங்கு வந்திருக்கேன்.” என நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்.

இவர்களைத் தாண்டி ரோகினியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், “படப்பிடிப்பு தளத்துல நான் ரஜினி சார்கூட பயந்து பயந்து நடிப்பேன். அப்போ அவர், ‘நீங்க என்கூட நடிப்பீங்களா.. கமல்கூடதான நடிப்பீங்க’னு சொல்வாரு. நான் அந்த சமயத்துல சரியாகப் பண்ணனும்னுதான் அதை விளையாட்டாக சொன்னார்.” என்றார்.

“இந்தப் படத்தில நான் ஒரு ஷாட்ல வந்தாலே ரொம்ப சந்தோசமாக இருந்திருக்கும். ஆனால் எனக்கு தலைவர்கூட நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. நான் மலையாளத்தில் அறிமுகமான படத்தில் மஞ்சு சேச்சிதான் நாயகியாக நடிச்சிருந்தாங்க. எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுப்பாங்க. நான் கமல் சாருடைய அவ்வளவு பெரிய பேன். ஆனால் இந்த படத்துக்குப் பிறகு அந்த இடத்தை ஷேர் பண்ண வேண்டியது வந்துருச்சு. ரஜினி சார்கிட்ட ஒருநாள் ‘இன்னமும் சாதிக்கணும்னு நினைக்கிற எனர்ஜி எங்க இருந்து கிடைக்கு’னு கேட்டேன். ‘என்னை கொண்டாடுற ரசிகர்கள்கிட்ட இருந்துதான் கிடைக்குது’ன்னு சொன்னார்” எனப் பேசினார் அபிராமி.

Untitled design 74 Thedalweb Vettaiyan: "ரஜினியின் எனர்ஜி ரகசியம்; படையப்பா மொமென்ட்" - நெகிழ்ந்த 'வேட்டையன்' கதாநாயகிகள்
Abirami , Manju Warrier, Rithika Singh

இதன் பிறகு மேடையில் பேசிய நடிகை மஞ்சு வாரியர், “எனக்கு தமிழ்ல இதுவரைக்கும் இரண்டு படங்கள்தான் ரிலீஸாகியிருக்கு. ஒன்னு ‘அசுரன்’, இன்னொன்னு ‘துணிவு’. ரஜினி சாரை நேர்ல பார்ப்பேன்னுகூட நினைச்சது கிடையாது. ஆனா, இப்போ அவர்கூட நடிச்சிருக்கேன். அவருடைய படங்கள் மட்டுமல்ல. அவருடைய மேடை பேச்சுகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரஜினி சார் ரெண்டு விஷயத்துக்குதான் பயப்படணும்னு சொல்லியிருப்பாரு. ஒன்னு கடவுளுக்கு பயப்படணும். இன்னொன்னு நல்லவங்களுக்கு பயப்படணும்னு சொல்லியிருப்பாரு. இந்த மாதிரியான பேச்சுகள் என்னை இன்ஸ்பயர் பண்ணியிருக்கு.” எனப் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *