இப்போ ஒரு நாள் கழுதை திரும்ப வந்துடுது. மறுபடியும் அவனுக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சு. அப்போ எல்லாரும் அந்த டோபி கிட்ட இதையே நம்ம பாத்துக்கலாம்… இந்த வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்றாங்க.
அந்த மாதிரிதான் அந்தப் படங்களோட ஓகே இல்லாத ஃபுட்டேஜஸை நீங்க பார்க்கல. ஒரு படத்துல எஸ்.பி சார் எனக்கு முதல் நாளே 14 பக்கத்துக்கு வசனம் கொடுத்தார். நான் பேசமாட்டேன்னு போயிட்டேன். எல்லோரும் ‘திமிரைப் பாருங்க. போகட்டும் விடுங்க’னு சொன்னாங்க.
எஸ்.பி சார் என்னை கூப்பிட்டு, உன்னால முடிஞ்சதை பண்ணு. பேக் ஷாட், டாப் ஆங்கிள் வைத்து எடுத்துக்கிறேனு சொன்னார். கமலுக்கு ஸ்ரீ தேவி மாதிரி ஹீரோயின்கூட நடிக்க வச்சாங்க. அப்போ எனக்கு டிராமா நடிகர்களோட நடிக்க வச்சாங்க. அப்படி வெள்ளை தாடி வச்சு ஆறிலிருந்து அறுபது வரை படத்துல நடிச்சேன். அப்புறம் ஒரு மாதிரி நல்ல டிராக்ல போயிட்டு இருக்கு.
சினிமாவுல 50 வருஷமாகப் போகுது. ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன்… நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன். இந்தப் படம் ஞானவேலுக்காக ஹிட் ஆகணும். அவர் நம்ம சினிமாவுக்குத் தேவை.” எனக் குறிப்பிட்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX