விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) திரைப்படம் செப்டம்பர் 5ல் வெளியாகவிருக்கிறது.
இந்தத் திரைப்படத்துக்காக ஹைதராபாத்தில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “தியேட்டர்ல கண்டிப்பா எல்லாரும் என்ஜாய் பண்ணுவீங்க. தளபதியை புதுசா பாக்க முடியும். நாங்களே பேசுறதால, இத திரும்பத் திரும்பச் சொல்கிறோம். இந்தப் படம் வித்தியாசமா இருக்கும்… புது வழியில் கதை சொல்லியிருக்கிறோம்… ஆனால் நீங்க வந்து பாத்துட்டு சொல்லுங்கள் எப்படி இருக்குன்னு.
எனக்கு நிறைய நட்சத்திரங்களோட வேலை செஞ்சது நிறைவான அனுபவம். விஜய் சார், பிரசாந்த் சார், பிரபுதேவா சார், மோகன் சார், ஜெயராம் சார், ஸ்நேகா மேடம், லைலா மேடம், மீனட்சி, வைபவ், பிரேம் ஜி… எல்லாரும் எனக்கு வேலைய ஈசி ஆக்குனாங்க.” என்றார்.