VJS : `நான் விமலின் மிகப்பெரிய ரசிகன், ஏனென்றால்...' - விமல் குறித்து நெகிழும் விஜய் சேதுபதி

VJS : `நான் விமலின் மிகப்பெரிய ரசிகன், ஏனென்றால்…' – விமல் குறித்து நெகிழும் விஜய் சேதுபதி


விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சார்’.

இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ரமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கின்றனர். சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், போஸ் வெங்கட், விமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டுள்ளனர்.

MV5BNTZjZDM2NmUtOTQyNi00NzJmLWFmNzUtODk2ZjVjMGU4MGMwXkEyXkFqcGc V1 FMjpg UX1000 Thedalweb VJS : `நான் விமலின் மிகப்பெரிய ரசிகன், ஏனென்றால்...' - விமல் குறித்து நெகிழும் விஜய் சேதுபதி
‘சார்’ திரைப்படம்

அதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ” ‘சார்’ படத்தை பார்த்துவிட்டேன். மிக நல்ல படம். மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய விஷயங்கள் எல்லாம் நம்மை சிந்திக்க வைக்கிறது. கூத்து பட்டறையில் இருக்கும்போது விமலுடைய ரசிகன் நான். அவ்வளவு சிறப்பாக நடிப்பார். விமலுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ” நான் சீரியலில் நடிக்கும்போது இருந்தே போஸ் வெங்கட்டை எனக்கு தெரியும். மெட்டி ஒலியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் ஆரம்பத்தில் 500 ரூபாய்க்கு ஆட்டோ ஓட்டி இருந்திருக்கிறார். பிறகு சீரியல் நடிகரானார். படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது படங்களை இயக்குகிறார். தன்னுடைய எல்லைகளைச் சுருக்கி கொள்ளாமல் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

Capture Thedalweb VJS : `நான் விமலின் மிகப்பெரிய ரசிகன், ஏனென்றால்...' - விமல் குறித்து நெகிழும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்

அவருடைய அரசியல் எதிர்காலத்தையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன். அரசியல் விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்துகொள்வது மிகவும் நன்றாக இருக்கும். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *