What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


G.O.A.T (தமிழ்)

G.O.A.T Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
G.O.A.T

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி (நேற்று முன்தினம்) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தந்தை – மகனுக்கும் இடையே நடக்கும் பழிவாங்கும் பகை திரில்லர்தான் இதன் கதைக்களம்.

35 (தெலுங்கு)

35 Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
35

நந்தா கிஷோர் இயக்கத்தில் நிவேதா தாமஸ், பிரிய தர்ஷினி புலிகொண்டா, விஷ்வதேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’35’. காமெடி கலாட்டா நிறைந்த குடும்பத் திரைப்படமான இது செப்டம்பர் 5-ம் தேதி (நேற்று முன்தினம் ) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Beetlejuice Beetlejuice (ஆங்கிலம்)

Beetlejuice%20Beetlejuice Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Beetlejuice Beetlejuice

டிம் பார்டன் இயக்கத்தில் மைக்கேல் கீட்டோன், வினோனா ரைடர், கேத்ரின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Beetlejuice Beetlejuice’. காமெடி, ஹாரர் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Strange Darling (ஆங்கிலம்)

Strange%20Darling Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Strange Darling

ஜே.டி.மோல்னர் இயக்கத்தில் வில்லா பிட்ஜெரால்டு, ஹையில் கெல்லனர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘Strange Darling’. ஹாரர், திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Problemista (இந்தி) – Jio Cinema

Problemista Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Problemista

ஜூலியோ டோரஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் `Problemista’.  ஒரு பொம்மை வடிவமைப்பாளர் தான் சாதிக்க நினைக்கும் விஷயங்களை எப்படியெல்லாம் செய்கிறார் என்பதே இதன் கதைக்களம். காமெடி திரில்லர் திரைப்படமான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Visfot (இந்தி) – Jio Cinema

Visfot Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Visfot

கூகி குல்லாட்டி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், ஃபார்டின் கான், ஷீபா சத்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘Visfot’. க்ரைம், திரில்லர் திரைப்படமான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Rebel Ridge (ஆங்கிலம்)

image 3 Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Rebel Ridge

ஜெரிமி சவுல்னியர் இயக்கத்தில் ஆரோன் பைர்ரி, டான் ஜான்சன், அன்னா சோபியா ராப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘Rebel Ridge’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்கள்

English Teacher (ஆங்கிலம்) – Disney + Hotstar 

English Teacher Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
English Teacher

ப்ரைன் ஜோர்டன் இயக்கத்தில் ஸ்டிபைனே கோயிங், என்ரிகோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘English Teacher’. காமெடி, கல்வித் தொடர்பானத் திரைப்படமான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Perfect Couple (ஆங்கிலம்) – Netflix

The Perfect Couple Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
The Perfect Couple

ஜென்னா லாமியா இயக்கத்தில் நிக்கோல் கிட்மேன், லேய்வி, ஈவ் லீவ்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Perfect Couple’. உறவுச் சிக்கல்களை ஜாலியாகப் பேசும் இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Call Me Bae (இந்தி) – Amazon Prime Video

%20Call%20Me%20Bae Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Call Me Bae

கோலின் கோ டி குன்ஹா இயக்கத்தில் அனன்யா பாண்டே நடித்துள்ள வெப்சீரிஸ் `Call Me Bae’. பணக்கார சொகுசு வாழ்க்கை வாழ்ந்தப் பெண், எல்லாவற்றையும் இழந்தப் பின் மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழ தடுமாறுவதே இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Fight Night: The Million Dollar Heist (ஆங்கிலம்) – Netflix

Fight%20Night%20The%20Million%20Dollar%20H%20%20eist Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Fight Night: The Million Dollar Heist

க்ரைங்க் பீவர் இயக்கியுள்ள வெப்சீரிஸ் `Fight Night: The Million Dollar Heist ‘. 1970ம் ஆண்டு மொஹம்மத் அலி மீண்டும் பாக்ஸிங் செய்ய வரும் சமயத்தில், திட்டமிடப்படும் ஒரு கொள்ளை சம்பவம் தான் கதை. நாலா தாம்சன், ஜாக்சன், புக்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

வாஸ்கோடகாமா (தமிழ்) – Aha

bg1 vasco da gama Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
வாஸ்கோடகாமா

ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல், கே.எஸ்.ரவிக்குமார், அர்த்தனா பினு, வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘வாஸ்கோடகாமா’. நகைச்சுவை திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Adios Amigo (மலையாளம்) – Netflix

Adios%20Amigo Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Adios Amigo

நிகாஸ் நாசர் இயக்கத்தில் ஆசிஃப் அலி, சூரஜ், ஷைன் டாம் சாக்கோ, அனஹா, வினீத், ஜின்னு ஜோசப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Adios Amigo’. அட்வென்சர், காமெடிகள் நிறைந்த இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Pavi Caretaker (மலையாளம்) – ManoramaMax

Pavi%20Caretaker Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Pavi Caretaker

வினீத் குமார் இயக்கத்தில் தீலீப், ஜான் அண்டனி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘Pavi Caretaker’. சாதாரண மிடில் கிளாஸ் ஃபேலிமேனின் வாழ்கையைச் சொல்லும் காமெடி திரைப்படமான இது ‘ManoramaMax’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Double iSmart (தெலுங்கு) – Amazon Prime Video

Double%20iSmart Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Double iSmart

பூரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் போத்தினி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Double iSmart’. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Kill (இந்தி) – Disney + Hotstar 

kill 01 BRIGHTER Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Kill

லக்ஷ்யா, ராகவ் ஜூயல் மற்றும் தன்யா மானிக்தலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kill’. ஆக்‌ஷன் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Bad Boys: Ride or Die (ஆங்கிலம்) – Netflix

Badboys Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Bad Boys: Ride or Die (ஆங்கிலம்)

அடில் எல் அர்பி மற்றும் பிலால் ஃபல்லா இயக்கத்தில் வில் ஸ்மித், மார்ட்டின் லாரன்ஸ், வனிஷா ஹுட்ஜென்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bad Boys: Ride or Die’. இது பேட் பாய்ஸ் படத்தொடரின் 4வது பாகம். காமெடிகள் நிறைந்த ஆக்‌ஷன் அட்வென்சர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Fall guy (ஆங்கிலம்) – Jio Cinema

header Thedalweb What to watch on Theatre and OTT: G.O.A.T, 35, Kill - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Fall guy

டேவிட் லெய்ட்ச் இயக்கத்தில் ரயான் கோஸ்லிங், எமிலி பிளன்ட், வின்ஸ்டன் டியூக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Fall guy’. காமெடி கலந்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *