🚨 Breaking
உங்கள் ஜாதகத்தில் புதாதித்ய யோகம் உள்ளதா? அதை எளிதாக கண்டறிவது எப்படி? 2026 தமிழ் ஜோதிட ரகசியங்கள்! (Budhaditya Yoga in Tamil) வைகாசி மாத கிரகப்பெயர்ச்சியால் மாபெரும் பண மழையில் நனையப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! லேட்டஸ்ட் ஜோதிட ரகசியங்கள் 2026 -Vaigasi Madha Graha Peyarchi புதிய வார ராசி பலன் 2026: இந்த வாரம் அதிர்ஷ்டக் காற்றில் மிதக்கப் போகும் அந்த 5 ராசிகள் யார் தெரியுமா? – Pudhiya Vaara Rasi Palan TNPSC Combined Technical Services Recruitment 2026 Tamil – Massive 461 Vacancies Released! | Apply Online Direct Link SSB (Sashastra Seema Bal) சீருடைப் பணியில் மாபெரும் வேலைவாய்ப்பு 2026! விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு – கடைசி நாள் ஜூன் 07! – SSB Recruitment 2026 கோயம்புத்தூர் OSC வன்முறை ஒழிப்பு மையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2026: உடனே விண்ணப்பியுங்கள் – கடைசி நாள் மே 30! – Coimbatore OSC Recruitment 2026 சென்னை CSIR – SERC நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2026! உடனே விண்ணப்பியுங்கள் – கடைசி நாள் மே 21! – CSIR SERC Chennai Recruitment 2026 தமிழகத்தில் 43°C அனல் வெயில்! அக்னி நட்சத்திரத்தில் இருந்து தப்பிக்க 5 எளிய வழிகள் மற்றும் ‘சப்ஜா விதைகள்’ நன்மைகள்! – Agni Natchathiram Protection Tips

கிராமத்து மீன் குழம்பு

📅 September 2, 2021 👁 29 ⏱ 3min read
கிராமத்து மீன் குழம்பு

Table of Contentsதேவையான பொருட்கள்: வறுத்து அரைப்பதற்கு…செய்முறை: நம் கிராமத்து ஸ்டைலில் ( கிராமத்து மீன் குழம்பு)குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த குழம்பில்…

📚 உள்ளடக்க பட்டியல்

நம் கிராமத்து ஸ்டைலில் ( கிராமத்து மீன் குழம்பு)குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மீன் – 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)

ADSENSE CODE

நல்லெண்ணெய் – 3

டேபிள் ஸ்பூன் கடுகு – 1

டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – சிறிது

புளி – 1 சிறிய

எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் – 1 கப் (துருவியது)

சின்ன வெங்காயம் – 10

வறுத்து அரைப்பதற்கு…

வரமிளகாய் – 8-10

மல்லி – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த பேஸ்ட் மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, மீன் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி!!!

#கிராமத்து மீன் குழம்பு

Related Searches :

🔥 மேலும் படிக்க