🔥 Breaking:
TNPSC Group 4 Updates | அரசு வேலை செய்திகள் | புதிய அறிவிப்புகள் | ThedalWeb

வேகமெடுக்கும் படப்பிடிப்பு! விக்ரம் படத்தில் ரியா ஷிபுவா? இணைந்த நடிகர்கள்! ‘சீயான் 63’ பரபர அப்டேட் actor vikram’s 63rd movie ‘chiyaan 63’ shoot update exclusively

வேகமெடுக்கும் படப்பிடிப்பு! விக்ரம் படத்தில் ரியா ஷிபுவா? இணைந்த நடிகர்கள்! 'சீயான் 63' பரபர அப்டேட் actor vikram's 63rd movie 'chiyaan 63' shoot update exclusively
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விக்ரமின் ரசிகர்கள். விக்ரமின் பிறந்த நாளில் வெளியான `சீயான் 63″ படத்தின் ஃபர்ஸ்ட் ஃப்ளேம் வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்ததோடு வீடியோவும் செம வைரலாகிவிட்டது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு அப்டேட்டை…
📅 May 7, 2026 👁 2 ⏱ 1 min
👉 இந்த செய்தியின் முக்கிய தகவல் கீழே 👇


மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விக்ரமின் ரசிகர்கள். விக்ரமின் பிறந்த நாளில் வெளியான `சீயான் 63″ படத்தின் ஃபர்ஸ்ட் ஃப்ளேம் வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்ததோடு வீடியோவும் செம வைரலாகிவிட்டது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்
Advertisement
ADSENSE CODE

விக்ரமின் 63-வது படத்தை ‘இருமுகன்’ ஆனந்த் சங்கர் இயக்குகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. டெக்னீஷியன்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் கவனிக்கிறார். முதன்முறையாக விக்ரமுடன் இணைந்திருக்கிறார் சனா.

படத்தின் ஒளிப்பதிவை விக்ரமின் முந்தைய படங்களான ‘பீமா’, ‘இருமுகன்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.டி.ராஜசேகர் கையாள்கிறார். ‘சீயான் 63’யில் ரியா ஷிபு ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. இதுகுறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்தோம்.

‘சர்வம் மாயா’ படத்தின் டெலுலுவாக ஸ்கோர் செய்தவர் ரியா ஷிபு. இதற்கு முன் இன்ஸ்டாகிராமில் வைரலானவர். ‘சர்வம் மாய’ 150 கோடிக்கு மேல் வசூல் ஆகியிருக்கிறது. ஓடிடியிலும் பெரிய வரவேற்பினை தொடந்து ரியா மலையாளத்தில் நடித்து வருகிறார். தமிழில் இவர் ஹீரோயினாக இல்லாமல் தயாரிப்பாளராக அறியப்பட்டவர். விக்ரம் நடித்த ‘வீரதீர சூரன்’ படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு தான். விக்ரமின் தீவிர ரசிகையான ரியாவை பலரும் தமிழில் நடிக்க கேட்டு வந்தனர். ரியா, விக்ரமின் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். நடிகையாக முதன்முறையாக தமிழுக்கு வரும் அவர் ‘சீயான் 63’ல் அழுத்தமான ஒரு கதாபாத்தில் நடிக்கிறார். படத்தின் ஹீரோயின் இவர் இல்லை என்கிறார்கள்.

இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை அல்ல என்பதால் அதற்கேற்ற நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முக்கியமான ரோலில் ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புக்கு கிளம்ப திட்டமிட்டனர். இப்போது ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்க்கு கிளம்புகின்றனர். முழுக்க முழுக்க சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது என்றும், தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் விக்ரம் தேதிகள் ஒதுக்கி கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதற்கிடையே விளம்பர படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்டைலீஷ் விக்ரம்.



Source link