அந்தக் காணொளியில் அவர், “நான் இந்த மாதிரி சீட் பெல்ட் போட்டு ஏதாவது வீடியோ போட்டாலே ஏதாவது ஒரு அப்டேட்டோட வரேன்னு அர்த்தம். அடுத்த வாரம் இதே நேரம், ‘கருப்பு’ படம் ரிலீஸ் பண்றதுக்கான வேலைகளைக் கவனிச்சுட்டு இருப்போம்.
படத்தின் டிரெய்லர் ரெடி. அனைவருக்கும் டிரெய்லர் பிடிக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா இப்போ நிறைய அரசியல் நிகழ்வுகள் நடந்துட்டு இருக்கு.
நாம் ஆசையாக ஓட்டுப் போட்டு ஒரு விஷயம் நடந்திருக்கு என்கிற மகிழ்ச்சியோட இருக்கும்போது பல எதிர்பாராத திருப்பங்கள். இந்தத் திருப்பங்கள்லாம் முடிஞ்சு, நல்ல விஷயம் நம்ம எதிர்பார்க்கிற விஷயம் சீக்கிரமே நடக்கட்டும்.

அதுக்கு நம்மலாம் வேண்டிப்போம். நல்லது நடக்கட்டும். நாம் டிரெய்லரை விட்டுட்டு அதுக்கப்புறம் பார்த்தா திடீர்னு அரசியல் விஷயங்கள் பயங்கரமா டேக் ஓவர் பண்ணக் கூடாதுன்னு காத்திருக்கோம்.
சீக்கிரமே ஒரு தெளிவு பிறக்கட்டும். உங்களுக்குப் பிடிச்ச மாதிரி படத்தை ரிலீஸ் பண்றதுக்கு பிளான் பண்ணிட்டு இருக்கோம்.
சீக்கிரமே அடுத்த கட்ட நடவடிக்கையோட உங்களைச் சந்திக்கிறேன். கருப்பன் கூட இருக்கான், கூட வருவான், நம்மள செமையா பாத்துப்பான்!” எனக் கூறியிருக்கிறார்.




