Table of Contents
ஆண்மைக்குறை
(broiler chicken side effects in tamil) குழந்தையின்மை பெருவாரியாகக் காணப்படும் இந்தப் பிரச்னை ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உணவுப்பழக்க வழக்கங்களைத்தான் மிக முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள், மருத்துவர்கள்.
அதிலும் குறிப்பாக, விரைவு உணவுகளும் (ஃபாஸ்ட் புட்) மற்றும் பிராய்லர் சிக்கன் உணவுகளைச் சாப்பிடுவதால் இந்தக் குறைபாடு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். நாகரிகம் கருதி ஹோட்டல்களில் சாப்பிடும் இளைஞர்களும், `வீக் எண்ட் செலிபிரேஷன்’ என்று சொல்லிக்கொண்டு ஹோட்டல்கள், கிளப்களுக்குச் செல்லும் குடும்பத்தினரும் விரும்பி உண்பது அந்த `பிராய்லர் சிக்கன்‘ எனப்படும் கறிக்கோழியைத்தான் என்றால் அது மிகையாகாது.
கொழுகொழு `
கொழுகொழு மொழுமொழு’ என்று காணப்படும் இந்த கறிக்கோழிகள் நிச்சயம் சாப்பிடச் சுவையாகத்தான் இருக்கும். சதைப்பற்று நிறைந்த இந்த கறிக்கோழிகளில் சிக்கன் 65, தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், சில்லி சிக்கன், போன்லெஸ் என விதம்விதமாகச் சமைத்துத் தரும்போது நம்மையும் அறியாமல் நம் நாக்கில் எச்சில் ஊறத்தான் செய்யும். ஆசை ஆசையாக மூக்குமுட்ட ஒரு பிடி பிடிக்கும் அந்த `பிராய்லர் சிக்கன்’ கோழிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பது தெரிந்தும் யாருக்கும் எவ்வித அச்சமும் இல்லை.
பொதுவாக வெள்ளை உணவுப்பொருள்கள் விஷம் என்றும் அவை எவையெவை (broiler chicken side effects in tamil )என்று பட்டியலிடவும் செய்திருக்கிறார்கள். வெள்ளை வெளேர் என்றிருக்கும் தீட்டிய அரிசி, சீனி எனப்படும் வெள்ளைச் சர்க்கரை, மைதாமாவு போன்றவற்றின் வரிசையில் இந்த வெள்ளை நிற பிராய்லர் சிக்கன் கோழிகளும் அடக்கம். அழுக்கு நிறத்தில் காணப்படும் கருப்பட்டியைவிட வெள்ளை வெளேர் என ஜொலிஜொலிக்கும் சர்க்கரை சாப்பிட ருசியாக இருக்கும்; ஆனால் அது ஆபத்தானது என்பது தெரிந்தும் சுவைக்கிறோம். அப்படித்தான் இந்த வெள்ளை நிற பிராய்லர் சிக்கனும்! எண்ணி நாற்பதே நாள்களில் ஒரு கோழிக்குஞ்சு முழு கோழியாகிறது. இதற்கு அந்த கோழிகளின் தீவனத்தில் 12 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுவது முதல் காரணம். மேலும் சீக்கிரம் வளர வேண்டுமென்பதற்காக ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசியானது செல்களை வேகமாக வளர வைத்து கோழியின் எடையை அதிகமாக்கவும் உதவுகிறது.
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஊசிகள் போட்டு குறுகிய காலத்தில் வளர்த்தெடுக்கப்படும் அவற்றைச் சாப்பிடுவதால் நமக்கு நேரும் பாதிப்புகளை அறிந்தும் புரிந்தும் அசட்டையாக இருக்கிறோம். இந்த கறிக்கோழிகளால் உடல்பருமனில் தொடங்கி மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறை, மாதவிடாய்ச் சிக்கல், புற்றுநோய் என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
சந்தையில் ஆடு விற்போர் அவற்றின் எடையை அதிகரித்துக் காட்டுவதற்காக குளம், குட்டைகளில் கிடக்கும் அழுக்குத்தண்ணீரை ஆடுகளின் வாயில் ஊற்றுவார்கள். அதைப்போல இந்த கறிக்கோழிகள் சீக்கிரம் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஊசியை அளவுக்கு அதிகமாக போட்டுவிடுகிறார்கள். ஆக, அவர்கள் எண்ணப்படியே கோழியும் வளர்ந்து அவர்களுக்குப் பலன் கொடுக்கிறது. அடுத்ததாக அந்தக் கோழிகளுக்கு அளவுக்கு அளவுக்கதிகமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.
ஆன்டிபயாட்டிக் என்பது நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்பது நமக்குத்தெரியும்; ஆனால் இந்த கோழிகளுக்கு அதிகமாக ஆன்டிபயாட்டிக் கொடுப்பதால் அவையும் நோய்வாய்ப்பட்டு அவற்றைச் சாப்பிடும் மனிதர்களையும் நோய்வாய்ப்படச் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை! நமது உடல் செயல்பாட்டுக்கு ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கின்றன. அவை குறைந்தாலும் பிரச்னைதான்; அளவு கூடினாலும் பிரச்னைதான். அந்தவகையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் செலுத்தப்படும் கறிக்கோழிகளைச் சாப்பிடும்போது அவை சமைத்தபிறகு அது நிலைமாறாமல் அப்படியே உடலுக்குள் செல்வதால் ஆண், பெண் இருவருக்கும் பிரச்னைதான்; குறிப்பாக ஆண்களுக்குத்தான் அதிக பிரச்னை.
மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் தூண்டுதலால் சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பெண்கள் பருவமடைய முக்கியக் காரணம். அவை இந்த கறிக்கோழிகளின் உபயத்தால் நம் உடலில் பல மடங்கு அதிகமாகச் செல்வதால்தான் இன்றைக்கு சின்னஞ்சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்கள். ஆக, ஆண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆண்மையை வளர்ப்பதற்குப் பதிலாக பெண்மைத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் வேலை அதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் குறிப்பாக, பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழித்தொழிக்கப்படுகிறது. கோழிகளின் தசை வளர்ச்சிக்காகச் செலுத்தப்படும் ஊசிகள் உயிரணுக்களை அழிக்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. அது நம்மில் பலருக்கும் புரிவதில்லை. பிராய்லர் சிக்கனுக்குப் பதிலாக நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவது நல்லது. அவற்றைச் சாப்பிடுவதால் ஆண்மைக்குறை ஏற்படுத்துமோ என்று அச்சப்படத்தேவையில்லை.
நாட்டுக்கோழி
புழு, பூச்சிகளையும், இலைதழைகளையும் சாப்பிட்டு வளரும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவதால் எந்தக்கெடுதலும் ஏற்படாது என்பதைப் புரிந்துகொண்டு நாட்டுக்கோழிக்கறியை வாங்கிச் சாப்பிடுவோம், நோய்களிலிருந்து விடுதலை பெறுவோம். ஆண்மைக்குறை ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் இனி நாட்டுக்கோழிக்கறியையே சாப்பிடுவதே நல்லது. அதேபோல் நாட்டுக்கோழி முட்டைதான் நல்லது. நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிகமாக இருக்கும். பொதுவாக முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து, கொழுப்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் பல சத்துகள் நிறைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முட்டைக்காக வளர்க்கப்படும் லேயர் கோழிகளின் முட்டையில் வெள்ளைக்கரு அதிகமாக இருக்கும். இதைச் சாப்பிடுவதால் எந்த பலனும் கிடையாது. முட்டைக்காக வளர்க்கப்படும் லேயர் கோழிகளின் சேவலில் இருந்து விந்துக்களை சேகரித்து ஊசி மூலம் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது.
இப்படி உருவாகும் முட்டையில் நாம் சத்துகளை எதிர்பார்க்க முடியுமா? மேலும், கோழிகளின் கால்பகுதியில்தான் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்கின்றன. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் அமெரிக்கர்கள் கோழியின் கால்களை வெறும் கழிவுப்பொருளாகவே கருதி அவற்றைச் சாப்பிடுவதில்லை. ஆனால், நாம் விரும்பி வாங்கி ருசிப்பது `லெக் பீஸ்’ எனப்படும் கோழிக்கால்களைத்தான்! ஆகவே, இந்த உண்மையைப் புரிந்துகொள்வோம். உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் பிராய்லர் சிக்கனைத் தவிர்ப்போம்!
#broiler chicken side effects in tamil | #broiler chicken side effects | #Broiler chicken side effects |#Broiler chicken health risks |#Broiler chicken dangersIs broiler chicken safe? |#Broiler chicken health concerns |#Effects of eating broiler chicken |#Broiler chicken and health issues |#Broiler chicken bad for health |#Why avoid broiler chicken? |#Risks of eating broiler chicken