Breaking
சமையல் நேரம் குறைய 5 மேஜிக் கிச்சன் ட்ரிக்ஸ் 2026 Tamil உங்க போனில் “இருண்ட திரையில்” (Dark Screen) சார்ஜ் இறங்குகிறதா? உங்களைஉளவு பார்க்கும் 3 ஆபத்தான ஆப்கள்: உடனேடெலிட் செய்யுங்க! மலச்சிக்கல் தீர 5 நார்ச்சத்துள்ள உணவுகள் 2026 Tamil | Malachikkal Theera Top 5 Fiber Foods வாயுத்தொல்லை, வயிற்று உப்பசம் தீர்க்கும் 5 உணவுகள் 2026 Tamil TNPSC குரூப் 1 தேர்வு 2026: விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு! 🥛 தினமும் காலையில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் உடலுக்குக் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள்! | Benefits of drinking warm water in the morning in Tamil 🍗 அசைவ உணவுக்குப் பின் வரும் நெஞ்செரிச்சல், அஜீரணத்தை 10 நிமிடத்தில் போக்கும் அற்புத வீட்டு வைத்தியம்! | Non-veg digestion home remedy in Tamil 🚀 ஜியோ, ஏர்டெலுக்கு செக் வைத்த பிஎஸ்என்எல் 2026 சிறந்த ரீசார்ஜ் பிளான்கள்: முழு விவரம் இதோ! | BSNL Best Plans 2026 in Tamil

உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home

📅 January 12, 2021 👁 15 ⏱ 6min read
உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home

Table of Contentsசில வழிகள்!பேக்கிங் சோடா மற்றும் பால்எலுமிச்சைதயிர்மஞ்சள், பால் மற்றும் தேன்சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்வெள்ளரிக்காய்மோர்தக்காளிபப்பாளி நம்மில் பலரும் அழகாக (how to get rid of dark knees quickly at home) இருக்க வேண்டுமென்று அடிக்கடி முகம், கை, கால்களுக்கு பராமரிப்புக்களைக் கொடுப்போம். அழகு…

📚 உள்ளடக்க பட்டியல்

நம்மில் பலரும் அழகாக (how to get rid of dark knees quickly at home) இருக்க வேண்டுமென்று அடிக்கடி முகம், கை, கால்களுக்கு பராமரிப்புக்களைக் கொடுப்போம். அழகு பராமரிப்பு என்று வரும் போது அதில் அதிகம் கண்டுக் கொள்ளாத ஒரு பகுதி என்றால் அது முழங்கை மற்றும் முழங்கால் பகுதியாகத் தான் இருக்கும். இந்த பகுதியில் உள்ள சருமம் சுருக்கங்களுடன் இருப்பதால், அங்கு அழுக்குகள் அதிகம் சேர்ந்து, கருமையாக காட்சியளிக்கின்றன. இதனால் சில இளம் பெண்கள் முழங்கால் அளவிலான உடையை உடுத்த ஆசை இருந்தும், கருமையின் காரணமாக அணிந்து கூட பார்க்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

உங்களின் முழங்கால் மற்றும் முழங்கை பகுதிகள் கருமையாக அசிங்கமாக உள்ளதா? அதை எப்படி போக்குவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஏனெனில் கீழே முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் உள்ள கருமையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

சில வழிகள்!

பேக்கிங் சோடா மற்றும் பால்

how to get rid of dark knees quickly at home
how to get rid of dark knees quickly at home

ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கருமையாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்கை பகுதியில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள எக்ஸ்போலியேட்டிங் பண்புகள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் மற்றும் பால் வறட்சியைத் தடுக்கும்.

ADSENSE CODE

எலுமிச்சை

lemon Thedalweb உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home
how to get rid of dark knees quickly at home

எலுமிச்சை சாற்றினை முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் கருமையைப் போக வைக்கும்.

தயிர்

curd 1 Thedalweb உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home
how to get rid of dark knees quickly at home

பொதுவாக தயிருக்கு சரும கருமையைப் போக்கும் திறன் உள்ளது. அதோடு இது நல்ல மாய்ஸ்சுரைசரும் கூட. அத்தகைய தயிரை முழங்கை, முழங்கால் பகுதியில் தடவி குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ, விரைவில் அப்பகுதியில் உள்ள கருமை நீங்கி வெள்ளையாகும்.

மஞ்சள், பால் மற்றும் தேன்

curdhoney Thedalweb உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home
how to get rid of dark knees quickly at home

மஞ்சளில் உள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள், பாலில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் தேனில் உள்ள மாய்ஸ்சுரைசிங் பண்புகள், சரும கருமையைப் போக்கும். அதற்கு இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்

oliveoil Thedalweb உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home
how to get rid of dark knees quickly at home

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து, முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, சருமமும் மென்மையாகும்.

வெள்ளரிக்காய்

cucumber Thedalweb உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home
how to get rid of dark knees quickly at home

வெள்ளரிக்காயின் (how to get rid of dark knees quickly at home )ஒரு துண்டை, முழங்கை மற்றும் முழங்காலில் சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், கருமையை நீக்கும் மற்றும் அதில் உள்ள நீர்ச்சத்து, சரும வறட்சியைத் தடுக்கும்.

மோர்

buttermilk Thedalweb உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home
how to get rid of dark knees quickly at home

மோரில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மோரை தினமும் கருமையாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சீக்கிரம் கருமை நீங்கும்.

தக்காளி

tomato Thedalweb உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home
how to get rid of dark knees quickly at home

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து நன்கு பேஸ்ட் போல் தயாரித்து, முழங்கை மற்றும் முழங்காலில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி

papaya Thedalweb உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home
how to get rid of dark knees quickly at home

பப்பாளி முழங்கால் மற்றும் முழங்கை பகுதியில் உள்ள கருமையை போக்கக்கூடியது. அதற்கு பப்பாளி துண்டை மென்மையாக பேஸ்ட் போல் நசுக்கி, முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

#how to get rid of dark knees quickly at home | #How to get rid of dark knees fast| #Home remedies for dark knees| #Quick solutions for dark knees| #Natural treatments for dark knees| #Lighten dark knees overnight |#DIY remedies for dark knees |#Whitening dark knees at home |#Best creams for dark knees |#Exfoliation for dark knees |#Dark knee scrub recipe |#Coconut oil for dark knees |#Lemon juice for dark knees |#Dark knees treatment home remedies |#Baking soda for dark knees |#Aloe vera for dark knees

🔥 மேலும் படிக்க