Table of Contents
National Science and Technology Policy
● அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( National Science and Technology Policy ) தொடர்பான முதல் கொள்கை 1958-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
● அறிவியலின் ஒவ்வொரு துறையில் அடிப்படை ஆராய்ச்சியை பெருவாரியாக வலியுறுத்திய முதல் கொள்கை இதுவேயாகும்.
● அறிவியல் ஆராய்ச்சியின் மேம்பாட்டிற்கான அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் அதனை கிடைக்கச் செய்வதற்கும் இந்தக் கொள்கை முக்கியத்துவம் அளித்தது.
● 1983 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இரண்டாவது கொள்கையானது தொழில்நுட்பத் திறன் மற்றும் தற்சார்பு அடைவதில் பெரிதாக கவனம் செலுத்தியது.
● 2003 ஆம் ஆண்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நன்மைகளை முன்னணியில் கொண்டு வந்தது.
● மேலும் இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான முதலீடுகள் மீதும் கவனம் செலுத்தியது.
● 2013 ஆம் ஆண்டின் அறிவியல் தொழில்நுட்பம் & புத்தாக்கக் கொள்கையானது கல்கத்தாவில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரசில் வெளியிடப்பட்டது.
● “அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மக்களுக்கான புத்தாக்கம்” என்பது 2013 ஆம் ஆண்டின் கொள்கையின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப் பட்டது.
● இது சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் உள்ள இளைஞர்களிடையே அறிவியலின் பயன்பாட்டுத் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
● 2020 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 5 அறிவியல் சக்தி கொண்ட நாடாக இந்தியாவை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது.
● பொது – தனியார் கூட்டு அடிப்படையில் பெரிய அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
● புதிய வழிமுறைகள் மூலமாகவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பேராபத்து சம்பந்தப்பட்ட புத்தாக்கங்களை விதைக்கவும் இது திட்டமிட்டுள்ளது.
● பொது நிதிகளைப் பெறுவதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அரசு நிறுவனங்களுக்கு இணையாக தனியார் துறையையும் கருதுவதை எண்ணிட இது திட்டமிட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்
● இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவித் தொகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இன்ஸ்பைர்
● 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2008) போது அப்போதைய அரசு இன்ஸ்பைர் அல்லது ஊக்குவிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கான அறிவியல் தேடலில் புதுமை (INSPIRE – Innovation in Science Pursuit for Inspired Research) எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
● இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்ட ஒரு புத்தாக்கத் திட்டமாகும்.
● இதன் குறிக்கோள்களாவன:
● சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு திறமையானவர்களை ஈர்த்திடுதல்
● நாட்டை வலுப்படுத்த தேவையான முக்கிய வளங்களை ஒன்றிணைக்க உதவுதல்.
● அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தளங்களை விரிவுபடுத்துதல்.
இன்ஸ்பையர் திட்டமானது பின்வரும் மூன்று துணைத் திட்டங்களைக் கொண்டுள்ளது.
1) திறமையானவர்களை ஆரம்பக் கட்டத்திலேயே ஈர்ப்பதற்கான திட்டம் (SEATS)
● இது புத்தாக்கங்களின் பலனை அனுபவிக்க இன்ஸ்பைர் விருதினை வழங்குவதன் மூலம் அறிவியலைப் படிக்க திறமையான இளைஞர்களை ஈர்க்கிறது.
● இது 10-15 வயதிற்குட்பட்ட ஒரு மில்லியன் இளம் வயது கற்போர்க்கு 5000 ரூபாயை வழங்குகின்றது.
2) உயர் கல்விக்கான உதவித்தொகை – SHE
● இது உதவித்தொகை வழங்குதல் மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சியர்களுடன் “கோடைக்கால இணைப்பு” மூலமாகவும் வழிகாட்டுதல் மூலமாகவும் திறமையான இளைஞர்களை அறிவியல் மிகுந்த திட்டங்களில் உயர் கல்வியை மேற்கொள்வதற்காக ஈர்க்கின்றது.
3) ஆராய்ச்சிப் பணிகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட வாய்ப்பு – AORC
● இது 22-27 வயதிற்குட்பட்டவர்களுக்கு முனைவர் படிப்பிற்கான இன்ஸ்பைர் உதவித் தொகை வழங்குவதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக திறமையான இளம் அறிவியல் அறிவு கொண்ட மனித வளத்தை ஈர்த்து, இணைத்து, தக்க வைத்துக் கொண்டு அதனை மேம்படுத்துகின்றது.
● இது அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் (பொறியியல் மற்றும் மருத்துவம் உட்பட) ஆகிய இரண்டையும் ஆதரிக்கின்றது.
வஜ்ரா திட்டம்
● அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது வஜ்ரா (மேம்பட்ட கூட்டு ஆராய்ச்சிக்கான வருகை) ஆசிரியத்துவ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
● இது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அயல்நாட்டு அறிவியல் சமூகத்தினர் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கேற்கவும் பங்களிக்கவும் உதவுகின்றது.
● இத்திட்டத்தின்கீழ், பொது நிதியளிக்கப்படும் இந்தியக் கல்வி நிறுவனங்களில் உள்ள பேராசிரியர்களுடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அல்லது மற்ற வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து ஆய்வுப் பணியாற்றலாம்.
● இந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் சொந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு இணையாக நிதியுதவியைப் பெறுவர்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை மேம்படுத்துவதற்கான உதவித்தொகை திட்டங்கள்
● அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது உதவித்தொகை திட்டங்கள் உட்பட பல்வேறு முன்முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றது.
● உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இந்திய அறிவியலாளர்களை அந்தந்த நிபுணத்துவ துறையில் இந்தியாவிலும் அவர்களின் நாட்டிலும் ஆராய்ச்சியைத் தொடரவும் அவர்களை இந்தியாவிற்கு ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
● அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது வெளிநாடுகளில் பணிபுரியும் ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இந்தியாவில் வேலை வாய்ப்புகளைக் கண்டறிய ஊக்குவிக்கும் இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இராமனுஜன் உதவித் தொகைத் திட்டம்
● இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்தும் சிறந்த அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்.
● இந்த உதவித்தொகை பெறுவோர் நாட்டின் எந்தவொரு அறிவியல் கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்ற இயலும்.
● மேலும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூடுதல் நிதியளிப்பு திட்டங்கள் மூலம் வெளிப்புற ஆய்வுக்கான மானியங்களைப் பெறவும் இவர்கள் தகுதியுடையவர்களாவர்.
● இந்த உதவித் தொகையளிக்கப்படும் கால வரம்பு ஐந்து ஆண்டுகளாகும்.
இராமலிங்க சாமி மறுநுழைவு உதவித்தொகை
● இது வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் ( National Science and Technology Policy ) பணிபுரியும் மற்றும் இந்தியாவிற்கு திரும்பி ஆராய்ச்சிகளைத் தொடர விரும்பும் இந்திய அறிவியலாளர்களுக்காக உயிரித் தொழில்நுட்பத் துறையால் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
● இது உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
● இந்த உதவித் தொகையானது ஐந்து ஆண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது.
● அவர்களின் ஆய்வுகளின் முன்னேற்றங்களைப் பொறுத்து புதிய மதிப்பீட்டின் அடிப்படையில் இரண்டாவது பணிக் காலத்திற்கு அவர்கள் பரிசீலிக்கப்படலாம்.
பெண்களுக்கான திட்டம் கிரண்
● 2014 ஆம் ஆண்டில் பெண்கள் சார்ந்த அனைத்து ஆதரவுத் திட்டங்களையும் கிரண் என்றழைக்கப்படும் ஒரே திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது மறுசீரமைத்தது.
● கிரண் என்பதன் விரிவாக்கம் “பேணுவதன் மூலம் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் அறிவின் ஈடுபாடு” என்பதாகும் (KIRAN-Knowledge Involvement in Research Advancement through Nurturing).
● இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாலின சமத்துவத்தை முடிந்த அளவுக்கு கொண்டு வருவதற்கான தனித்துவமான விளம்பரத் திட்டமாகும்.
● கிரண் திட்டமானது பெண் அறிவியலாளர்களுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு (வேலையின்மை, இடமாற்றம் மற்றும் பல) தீர்வு காண்பதுடன் பின்வருவனவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
● ஆராய்ச்சியில் வாய்ப்புகளை வழங்குதல் (WOS – A)
● தொழில்நுட்ப மேம்பாடு/செயல்விளக்கத்தில் வாய்ப்புகளை வழங்குதல் (WOS – B)
● சுயவேலை வாய்ப்புகளில் வாய்ப்புகளை வழங்குதல் (WOS – C)
பெண் விஞ்ஞானிகள் திட்டம் A, B & C
● பெண் விஞ்ஞானிகள் திட்டம் – A (WOS – A): அடிப்படை / பயன்பாட்டு அறிவியல்
● பெண் விஞ்ஞானிகள் திட்டம் – B (WOS – B): சமூகப் பழக்க வழக்கம் சார்ந்த நலன்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தலையீடு
● பெண் விஞ்ஞானிகள் திட்டம் – C (WOS – C): சுய தொழிலுக்காக அறிவுசார் சொத்துரிமைகளில் உள்நிலைப் பயிற்சி
● இது அறிவியல் மற்றும் பொறியியலின் முன்னணிப் பகுதிகளில் அடிப்படை அல்லது பயன்பாட்டு அறிவியல் ஆராய்ச்சியைத் தொடர பெண் அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.
● இந்தத் திட்டமானது பாலினத்தைப் பிரதானப் படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிருந்து திறன் வெளியேற்றத்தை தடுப்பது மட்டுமல்லாமல் பெண்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.
திஷா
● சமூகத் திட்டங்களுக்கான பெண் அறிவியலாளர்களுக்கு உதவித் தொகையளிக்கும் இந்தத் திட்டமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சியாகும். ● இது சமூகப் பொறுப்புகள் காரணமாக வேலையை துறந்த ஆனால் பிரதான அறிவியலுக்குத் திரும்பி பணி நிலை அறிவியலாளராகப் பணியாற்ற விருப்பம் கொண்ட பெண்களை இலக்காகக் கொண்டது.
● மேலும் இது தனித்துவமான சமூகத் தாக்கத்தைக் கொண்ட திட்டங்களை எடுத்து அறிவுசார் சொத்து களத்தில் அதற்கான பணியை ஆராய்கிறது.
கியூரி
● மகளிர் பல்கலைக்கழகங்களில் புத்தாக்கம் மற்றும் சிறப்பிற்கான பல்கலைக்கழக ஆராய்ச்சிகளின் ஒருங்கிணைப்பு (Consolidation of University Research for Innovation and Excellence-CURIE) என்பது கிரண் திட்டத்தின் மற்றொரு அங்கமாகும்.
● இது கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை வலுப்படுத்தி அதனை மேம்படுத்துவதற்காக மகளிர் பல்கலைக்கழகங்களுக்கு அதிநவீன உள்கட்டமைப்பு ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்களுக்கான இந்தோ – அமெரிக்க ஸ்டெம் உதவித் தொகை
● அறிவியல் மற்றும் ( National Science and Technology Policy )தொழில்நுட்பத் துறை மற்றும் இந்தோ-அமெரிக்கா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் ஆகியவை இணைந்து “பெண்களுக்கான இந்தோ – அமெரிக்க ஸ்டெம் (STEMM) உதவித் தொகை” எனும் திட்டத்தை அறிவித்தது. (STEMM – Science, Technology, Engineering, Mathematics and Medicine – அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவம்)
● இது இந்தியப் பெண் அறிவியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு அமெரிக்காவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களில் சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்குவதையும் அவர்களின் ஆற்றல் மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
#National Science and Technology Policy | #Science, Technology, and Innovation Policy (STIP) | #Technology Policy Statement
| #National Policy on Software Products | #National Digital Communication Policy | #National Biotechnology Development Strategy
| #National Innovation and Start-up Policy