ஒருவேளை படத்தின் பேட்ச் வொர்க் மிச்சமிருந்தால், அவர்தான் சினிமாவில் ஜீனியஸ் ஆச்சே, நீங்கள் இல்லாமலேகூட அவற்றைச் செய்து முடிப்பார். ஆனால், நீங்கள் ஷேவ் செய்ய வேண்டும். லோகேஷ் பார்க்க மிகவும் கலையாக இருப்பார்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக லோகேஷின் முகத்தையே நான் தேட வேண்டியிருக்கிறது. இதுவே எனது வேண்டுகோள்” என்றவர், “மற்றொரு முக்கியமான தகவலையும் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

கடந்த தேர்தல் நாளன்று, ‘லோகேஷ் ஏன் ஓட்டுப் போட வரவில்லை?’ என்று பலரும் அவரைத் தேடி விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள்.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

அதன் பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது, அதை நானே சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், அவரே இதைச் சொன்னால் நன்றாக இருக்காது. அன்று நான் ஓட்டுப் போட்டுவிட்டு, மும்பைக்கு ஐ.பி.எல் கமென்ட்ரி செய்வதற்காகச் சென்றேன்.

அவர் சென்னையில் ஒரு வேலையை முடித்துவிட்டு, ஓட்டுப் போடுவதற்காகக் கோயம்புத்தூருக்குப் புறப்பட்டார். நாங்கள் இருவரும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டோம். பாசமாகப் பேசினோம்.

நான் எனது விமானத்தில் ஏறிய பிறகு கவனித்தபோது, நான்கு பேர் லோகேஷை அழைத்துச் சென்றனர். கதவு மூடப்பட்டுவிட்டதால், அவரால் அந்த விமானத்தைப் பிடிக்க முடியாமல் போனது” எனப் பேசினார்.



Source link