Breaking
இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026

குஜராத்தி சிக்கன் குழம்பு

📅 September 2, 2021 👁 24 ⏱ 3min read
குஜராத்தி சிக்கன் குழம்பு

இந்தியாவிலேயே பல வகைகளில் சிக்கன் குழம்பை வைப்பார்கள். அதில் ஒன்று குஜராத்தி சிக்கன் குழம்பு. இந்த ஸ்டைல் குழம்பின் ஸ்பெஷலே, அதில் சேர்க்கப்படும் குஜராத்தி மசாலா தான். கார உணவுகளை விரும்பி சாப்பிடுவோருக்கு இது ஓர் அருமையான ரெசிபி. அந்த குஜராத்தி சிக்கன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று…

📚 உள்ளடக்க பட்டியல்

இந்தியாவிலேயே பல வகைகளில் சிக்கன் குழம்பை வைப்பார்கள். அதில் ஒன்று குஜராத்தி சிக்கன் குழம்பு. இந்த ஸ்டைல் குழம்பின் ஸ்பெஷலே, அதில் சேர்க்கப்படும் குஜராத்தி மசாலா தான். கார உணவுகளை விரும்பி சாப்பிடுவோருக்கு இது ஓர் அருமையான ரெசிபி.

அந்த குஜராத்தி சிக்கன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ADSENSE CODE

சிக்கன் – 1 கிலோ

வெங்காயம் – 2 (பெரியது மற்றும் நறுக்கியது)

தக்காளி – 3 (பெரியது மற்றும் நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 2 (பெரியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

குஜராத்தி மசாலா – 4 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1/4 கப்

தாளிப்பதற்கு…

பட்டை – 1

பிரியாணி இலை – 2

ஏலக்காய் – 6

கிராம்பு – 5

அன்னாசிப்பூ – 1

மசாலாப் பொடிகள்…

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 2 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

குஜராத்தி மசாலாவிற்கு…

இஞ்சி – 1/4 கப் (நறுக்கியது)

பூண்டு – 30 பற்கள்

பச்சை மிளகாய் – 7

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் குஜராத்தி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளத்து, பின் வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள குஜராத்தி மசாலா, உப்பு, மசாலாப் பொடிகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வக்கி, பின் சிக்கனை சேர்த்து நன்கு மசாலாவுடன் சேருமாறு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் விட்டு, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.

விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவினால், குஜராத்தி சிக்கன் குழம்பு ரெடி!!!

Related Searches :

🔥 மேலும் படிக்க