Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

Asha Bhosle: "அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும்"- உருக்கமாக வீடியோ வெளியிட்ட இளையராஜா

April 13, 2026 36 2min read smurali35
Asha Bhosle: "அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும்"- உருக்கமாக வீடியோ வெளியிட்ட இளையராஜா

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல். 12) உடல்நல பாதிப்பால் காலமாகியிருக்கிறார். அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 பாடல்களைப் பாடியிருக்கிறார். பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்து உருக்கமாக வீடியோ ஒன்றை…


பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல். 12) உடல்நல பாதிப்பால் காலமாகியிருக்கிறார்.

அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்து உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Asha Bhosle
Asha Bhosle

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ” பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே அவர்களின் மறைவு செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமுற்றேன்.

இது ஒரு சாதாரண இரங்கல் அல்ல. என் மனதிற்கு மிக அருகில் இருக்கும் ஒரு பெரும் இழப்பு. அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும், அதே நேரத்தில் ஒரு பின்னணி பாடகியாக என்னை மதித்து நடந்து கொண்ட விதமும் என்றும் மறக்க முடியாதவை.

அந்த நினைவுகள் என் வாழ்நாளில் எப்போதும் என்னுடன் இருக்கும். என் வாழ்க்கையில் அழியாத இடத்தைப் பெற்றவர் ஆஷா போஸ்லே.

அவரது திறமைக்கு அளவே இல்லை, வேறு எந்த குரல்களுடனும் ஒப்பிடமுடியாத தனிக்குரல். தனித்திறமை வாய்ந்த குரலும்கூட, அவரின் இழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

இளையராஜா
இளையராஜா

எப்போது சென்னைக்கு வந்தாலும், என்னை வந்து சந்திக்கும் அன்புச் சகோதரி, அவரின் அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது. திரையுலகம் என்றைக்கும் மறக்க முடியாத குரல்.

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்துவாடும் குடும்பத்திற்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இளையராஜா உருக்கமாக இரங்கல் தெரிவித்திருக்கிறார்.





Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்