சுவை மிகுந்த பாதாம் அல்வா செய்வது எப்படி.? | Badham halwa seivathu eppadi

Badham halwa seivathu eppadi

தேவையான பொருட்கள்: 

பாதாம்  – 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது)

சர்க்கரை – 1/2 கப்

பால் – 1 கப்

நெய் – 1/2 கப்

குங்குமப்பூ – சிறிது (பாலில் ஊற வைத்தது)

Badham halwa seivathu eppadi
பாதாம் அல்வா


செய்முறை: முதலில் ( Badham halwa seivathu eppadi )ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி வாணலியில் பரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விட வேண்டும்.

பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். 

அப்படி கிளறி விடும் போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும் போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும்.

அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், வாணலியை இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி குளிர வைத்தால், பாதாம் அல்வா தயார்.

Related Searches :