Breaking
🥛 தினமும் காலையில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் உடலுக்குக் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள்! | Benefits of drinking warm water in the morning in Tamil 🍗 அசைவ உணவுக்குப் பின் வரும் நெஞ்செரிச்சல், அஜீரணத்தை 10 நிமிடத்தில் போக்கும் அற்புத வீட்டு வைத்தியம்! | Non-veg digestion home remedy in Tamil 🚀 ஜியோ, ஏர்டெலுக்கு செக் வைத்த பிஎஸ்என்எல் 2026 சிறந்த ரீசார்ஜ் பிளான்கள்: முழு விவரம் இதோ! | BSNL Best Plans 2026 in Tamil 📞 அதிர்ச்சி தரும் மொபைல் கட்டண உயர்வு 2026: பொதுமக்கள் தப்பிக்க 5 எளிய மாற்று வழிகள்! | Mobile Tariff Hike 2026 (Mobile Tariff Hike 2026 in Tamil) உங்களின் பணம் பலமடங்கு பெருகும்! ஜூலை 2026 முதல் முதலீடு செய்ய சிறந்த 3 ஆபத்தில்லாத போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்! | Post Office Saving Schemes (Tamil Investment Guide) பொதுமக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய புதிய விதிகள்! உங்கள் பாக்கெட்டை பாதிக்குமா? 2026 (New Rules from July 1) உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – வாழைப்பழ கொழுக்கட்டை | Banana dumplings

📅 September 9, 2021 👁 9 ⏱ 3min read
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – வாழைப்பழ கொழுக்கட்டை | Banana dumplings

Table of ContentsBanana dumplings தேவையான பொருட்கள்:செய்முறை: Related Searches : Banana dumplings Banana dumplings அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த (Banana dumplings )கொழுக்கட்டைகளை செய்ய தயாராகிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சற்று வித்தியாசமான கொழுக்கட்டையை செய்ய விரும்பினால், இக்கட்டுரை உங்களுக்கானது. பொதுவாக கொழுக்கட்டையிலேயே பல வெரைட்டிகள்…

📚 உள்ளடக்க பட்டியல்

Banana dumplings

Banana dumplings
Banana dumplings

அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த (Banana dumplings )கொழுக்கட்டைகளை செய்ய தயாராகிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சற்று வித்தியாசமான கொழுக்கட்டையை செய்ய விரும்பினால், இக்கட்டுரை உங்களுக்கானது. பொதுவாக கொழுக்கட்டையிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தால் உள்ளே வைக்கும் பூர்ணமாகத் தான் இருக்கும்.

ஆனால் இப்போது நாம் பார்க்கப் போகும் கொழுக்கட்டையோ வித்தியாசமானது. அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வாழைப்பழத்தைக் கொண்டு செய்யக்கூடியது. நிச்சயம் இதுநாள் வரை இப்படிப்பட்ட கொழுக்கட்டை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். இந்த விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான கொழுக்கட்டையை விநாயகருக்கு படைக்க நினைத்தால், இந்த வாழைப்பழ கொழுக்கட்டையை செய்து படையுங்கள்.

சரி, வாருங்கள் இப்போது அந்த வாழைப்பழ கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று காண்போம்.

ADSENSE CODE

தேவையான பொருட்கள்:

* இடியாப்ப மாவு – 1 கப்

* கனிந்த வாழைப்பழம் – 1

* சர்க்கரை – 1/2 கப்

* தண்ணீர் – 3/4 கப்

* ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்

* நெய் – தேவையான அளவு

செய்முறை:

* ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் கனிந்த வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதுவும் மாவு நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட்டு இறக்க வேண்டும்.

* பிறகு மாவை நன்கு குளிர வைக்க வேண்டும்.

* அடுத்ததாக குளிர வைத்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி நன்கு சூடான பின் இட்லி தட்டை வைத்து மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான வாழைப்பழ கொழுக்கட்டை ரெடி!

#Banana dumplings

Related Searches :

🔥 மேலும் படிக்க