[ad_1]
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘ராஜா சிவாஜி’.
ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘ராஜா சிவாஜி’ படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார்.
மே 1 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல்.20) நடைபெற்றது.

அப்போது சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வருவதில் எதிர்கொண்ட சவால்களை ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் விவரித்திருக்கிறார்.
அதேசமயம் தனது கனவுக்கு தூணாக இருந்த ஜெனிலியாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அந்த சமயத்தில் ரித்தேஷ் பேசுவதைக் கேட்டு, ஜெனிலியா தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேடையில் ஜெனிலியா குறித்துப் பேசிய ரித்தேஷ் தேஷ்முக், “நான் கடந்த 2016ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். பத்து வருடங்கள் ஆகியும் அது நடக்கவில்லை. இடையில் மீண்டும் முயற்சித்தேன். ஆனால் கொரோனா காரணமாக முடியவில்லை.
கனவு காண்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால் நீங்கள் கனவு காணும்போது யாராவது ஒருவர் உங்களுக்கு ஆதரவாகவும், உங்கள் மீது நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும். அப்படி எனக்கு துணையாக நின்றவர் ஜெனிலியா.

என் மீது நம்பிக்கை வைத்து என்னுடைய கனவை நனவாக்கினார். நான் இயக்குநராக படங்களை இயக்கிக் கொண்டிருந்த நேரத்தில் எனக்காக பல தியாகங்களைச் செய்தார். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார்.
அவரின் ஆதரவு இல்லை என்றால், இன்று ‘ராஜா சிவாஜி’ இவ்வளவு பிரமாண்டமாக உருவாகியிருக்காது. என் வாழ்க்கையிலும், இந்தத் திரைப்படத்திலும் அவர் ஆற்றிய பங்கை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது” என்று தெரிவித்திருக்கிறார்.
[ad_2]
Source link




