[ad_1]
தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் “TN 2026′ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.
நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
அந்த டீசர் வெளியானது முதல், இப்படம் விஜய்யின் அரசியல் வாழ்க்கை பற்றிய படம் என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. நேற்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
படத்தைப் பற்றி இணையத்தில் பேசப்பட்டு வரும் விஷயங்கள் தொடர்பாகவும் படக்குழுவினரும் இந்நிகழ்வில் விளக்கமளித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் தம்பி ராமையா பேசுகையில், “அரசியல் புரிதல் இருந்ததால்தான் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது.
தம்பி நட்டியை, இந்தக் கதை நடிகராக அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போகும் என்பதில் சினிமா ரசிகராக எனக்கு அத்தனை மகிழ்ச்சி.
இந்தக் கதையை நான் எழுதினேன். என் மகன் அதனை உள்வாங்கிக் கொண்டான். என் மகன் அதனை பிரமாதமாக எனக்கே எடுத்துக் காண்பித்துவிட்டார்.
[ad_2]
Source link




