“தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" – 'யூத்' கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

April 20, 2026 64 2min read smurali35
“தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" – 'யூத்' கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருணாஸின் மகன் கென் கருணாஸ் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த ‘யூத்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தைப் பார்த்த…


கருணாஸின் மகன் கென் கருணாஸ் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த ‘யூத்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

இப்படத்தைப் பார்த்த ‘காந்தாரா’ புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி, சமூக வலைதளத்தில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அதில்,“நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுப் படத்தையும் புன்னகையோடு ரசித்துப் பார்த்தேன். ‘யூத்’ திரைப்படம் காதல், நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிறைந்துள்ளது.

இது அனைத்து பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அழகான படைப்பு. கென் கருணாஸ், ஒரே ஆளாக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, மிக நேர்த்தியான நடிப்பையும் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. சூரஜ் வெஞ்சாரமூடு சார், தேவதர்ஷினி மேடம் மற்றும் அந்த நண்பர்கள் பட்டாளம் என ஒவ்வொரு நடிகரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவாளர் விக்கி என ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவின் பணியும் அற்புதம். தம்பி கென், நீ சினிமா உலகிற்கு ஒரு சொத்தாகத் திகழ்வாய்!” எனப் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





Source link

மேலும் படிக்க

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்