அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களின் வெளியீட்டு திட்டங்கள் குறித்த விவரம் தெரியவந்துள்ளது.
பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எப்போது வெளியீடு என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. இப்படம் வராத காரணத்தினால் சுமார் 10 படங்கள் பொங்கல் விடுமுறைக்கு வரவுள்ளன. இதனிடையே, ‘விடாமுயற்சி’ வெளியீட்டுத் திட்டம் குறித்து விசாரித்தபோது ஜனவரி இறுதியில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் பிரச்சினைகள் அனைத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது. படத்தை விளம்பரப்படுத்த டீஸர், ட்ரெய்லர், ப்ரோமோக்கள் உள்ளிட்ட அனைத்தின் தணிக்கை பணிகளும் முடித்துவிட்டது படக்குழு.
‘குட் பேட் அக்லி’ வெளியீட்டைப் பொறுத்தவரை பொங்கல் வெளியீட்டில் உறுதியாக இருந்தது. ‘விடாமுயற்சி’ வரவிருந்ததால் மட்டுமே அன்றைய தினத்தில் இருந்து பின்வாங்கி, பணிகளையும் தாமதப்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இனி ‘விடாமுயற்சி’ எப்போது வெளியானாலும் கவலைப்படாமல் ஏப்ரல் 10-ம் தேதி வந்துவிட வேண்டும் என்ற முடிவினையும் எடுத்துள்ளார்கள்.