அஞ்சறைப் பெட்டியில் உள்ள முக்கியமான ஒரு நறுமணமிக்க பொருள் தான் பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படும் சோம்பு விதைகள். இந்த விதைகள் நல்ல மணத்துடன் இருப்பதால், இச்சிறிய விதைகள் வாய் புத்துணர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதோடு சோம்பு விதைகள் சில குழம்பு, ஊறுகாய் மற்றும் இனிப்பு பலகாரங்களிலும் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சோம்பு விதைகள் உணவிற்கு நல்ல ப்ளேவரை வழங்குவதோடு, உடல் எடை இழப்பு செயல்பாட்டின் போது உடலுக்கு நன்மை விளைவிப்பதில் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன.

இன்றைய அவசர உலகில் பெரும்பாலானோர் அதிகரித்த உடல் எடையைக் குறைக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உடல் பருமனைக் குறைப்பதற்கு பல்வேறு டயட்டுகள், உடற்பயிற்சிகள் இருந்தாலும், இவற்றை சரியான முறையில் பின்பற்ற பலரால் முடிவதில்லை. ஆகவே உடல் எடையைக் குறைப்பதற்கு வேறு சில எளிய வழிகளை மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் உடல் எடையைக் குறைக்க சிம்பிளான வழியைத் தேடுபவராயின் இக்கட்டுரை உங்களுக்கானது.

சோம்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 edited Thedalweb weight loss tips at home tamil - மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?

சோம்பு விதைகளில் டையூரிக் பண்புகள் உள்ளன. இவை உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. அதோடு இந்த சிறிய விதைகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றன. மேலும் சோம்பில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இப்படிப்பட்ட சோம்பை உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் 3 வழிகளில் சாப்பிடலாம். கீழே அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்ற வழியைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

சோம்பு நீர்

எடை இழப்பு என்று வரும் போது சோம்பு நீர் ஒரு அற்புதமான பானம். சோம்பு நீரை தொடர்ந்து குடித்து வந்தால், அது உடலில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை உறிஞ்சும் அளவை அதிகரித்து உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைக்கும். ஆகவே எடையை இழக்க நினைப்போருக்கு சோம்பு நீர் மிகவும் நல்லது.

சோம்பு நீர் தயாரிக்கும் முறை

சோம்பு நீர் தயாரிப்பதற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீரை ஊற்றி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து, ஊற வைத்த சோம்பு நீரை ஒரு டம்ளர் எடுத்து, கொதிக்க வைத்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மீதமுள்ள சோம்பு நீரை மாலை வேளையில் வெதுவெதுப்பாக சூடேற்றி, டீக்கு பதிலாக குடிக்க வேண்டும். இதனால் எடை இழப்பு செயல்முறை வேகமாக்கப்படும்.

சோம்பு சூரண பொடி

4 churan powder 1611815744 Thedalweb weight loss tips at home tamil - மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?

சோம்பு சூரணம் எடை இழப்பிற்கு மட்டுமின்றி, பல்வேறு வயிற்று பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று வலி, அசிடிட்டி மற்றும் அஜீரண கோளாறு போன்ற பலவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவும். அதற்கு மதிய உணவிற்கு பின் ஒரு ஸ்பூன் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் சோம்பில் உள்ள உட்பொருட்கள், செரிமானத்திற்கு தேவையான நொதிகளின் உற்பத்திக்கு உதவி புரிந்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

5 spices 1611815752 Thedalweb weight loss tips at home tamil - மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?

* சோம்பு – 4 டேபிள் ஸ்பூன்

* ஓமம் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

* வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன்

* ப்ளாக் சால்ட் – ஒரு டீஸ்பூன்

* கற்கண்டு – ஒரு டீஸ்பூன்

6 jeerawater 1611815758 Thedalweb weight loss tips at home tamil - மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?

செய்முறை:

*முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, ஓமம், சீரகம், வெந்தயத்தைப் போட்டு குறைவான தீயில் 4 நிமிடங்கள் வறுத்து இறக்கவும்.

* பின் வறுத்த பொருட்களை குளிர வைத்து, அவற்றை பிளெண்டரில் போட்டு, அத்துடன் ப்ளால் சால்ட், கற்கண்டு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அரைத்து பொடியை ஒரு காற்றுப்புகாத ஜாரில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் தினமும் மதிய உணவிற்கு பின் ஒரு டீஸ்பூன் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

சோம்பு டீ

பலருக்கு ஒரு கப் டீ குடிக்காமல் எதையும் செய்ய முடியாது. நீங்கள் டீ பிரியராக இருந்தால், உங்களால் டீ குடிக்க முடியாமல் இருக்க முடியாது என்றால், உங்களின் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருப்பவராயின், சோம்பு மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் டீயைக் குடியுங்கள். இந்த டீ எடை இழப்பு செயல்முறையை அதிகரித்து, வேகமாக எடையைக் குறைக்கச் செய்யும்.

8 fenneltea 1611815778 Thedalweb weight loss tips at home tamil - மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?

சோம்பு டீ தயாரிக்கும் முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் நீரை ஊற்றி, அதில் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.

* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஒரு டீஸ்பூன் டீ தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் வெல்ல பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.

* பின்பு அதில் கால் கப் பால் ஊற்றி கிளறி, பால் நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்து விட்டு, ஒரு மூடி கொண்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.

* பிறகு மூடியைத் திறந்து, டீயை வடிகட்டி குடிக்கவும்.

Leave a Reply