உணவே மருந்து – மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்கு என்று நமது விருப்பப் படி சாப்பிடுவதாலும் நேரத்திற்குச் சாப்பிடாமல் கண்டபடி சாப்பிடுவதாலும், நமது உடலுக்கு ஏற்காத உணவு வகைகளை நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிடுவதாலும் நமது உடல் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே இழந்துவிடுகிறது. இதனால் எளிதில் நமது உடம்பை சாதாரண நோய் முதல் தீராத நாட்பட்ட நோய்கள் தாக்கி நோய் உண்டாக்கி விடுகின்றன.

நாமும் அவசரத்திற்கு தகுந்த காரணத்தை ஆராயாமலும், அதற்கு உண்டான நல்ல மருத்துவரை நாடாமால் நாமே மருந்துக்கடைக்குப் போய் நமது பிரச்சினைகளைக் கூறி மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவதால் நோய் சில சமயம் குணமாவதைப் போலத் தெரிந்தாலும் மீண்டும் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினால் நமது உடம்பை நோய் தாக்குகிறது. ஒவ்வொருவரும் நேரத்திற்கும் அதுவும் அவரவருக்கு ஏற்ற உணவு வகைகளை உண்டுவந்தால் நோய் எளிதில் நம்மைத் தாக்க முடியாது.

உணவே மருந்து – மருந்தே உணவு
உணவே மருந்து – மருந்தே உணவு

ஒரு வாரத்திற்கு உணவு முறைகளை வகைப்படுத்திக் கூறியுள்ளேன். நோய் வாய்ப்பட்டவர்களும், சாதாரணமானவர்களும் இந்த முறையைக் கடைப்பிடித்து சாப்பிட்டு வந்தால் இதன் உண்மையை உணரலாம்.

உணவே மருந்து – மருந்தே உணவு

unnamed 1 Thedalweb உணவே மருந்து - மருந்தே உணவு ( Food is medicine - medicine is food )
திங்கட்கிழமை

காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவேண்டும். எவ்வளவு அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்களோ அவ்வளவு உடம்பு நன்றாக இருக்கும். இதனால் உடல் சூடு தணியும். மலம் இளக்கமாக போகும். தேகம் சம நிலை அடையும்.

பின்னர் ஏழு மணிக்கு அருகம்புல் சாறு ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். மூன்று மணிக்கு சுக்கு, கொத்தமல்லி கலந்து காபி குடிக்கலாம். பதினோறு மணிக்கு பச்சைக் காய்கறிகள் கலந்த சாலட் அல்லது பேரிச்சம்பழம் ஐம்பது கிராம் அல்லது திராட்சை நூறு கிராம் அல்லது வாழைப்பழம் இரண்டு சாப்பிடலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், ஒரு கப் ஏதாவது கீரை, இரண்டு கப் வேகவைத்த காய்கறிகள், இரண்டு டம்ளர் மோர், இரண்டு பேரிச்சம் பழம் மட்டும்.

மாலை நான்கு மணிக்கு கொண்டைக் கடலை அல்லது மொச்சை வேகவைத்தது ஒரு கப், அத்துடன் ஒரு டம்ளர் சுக்கு காபி. இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி. ஒன்று அல்லது இரண்டு வாழை அல்லது பேரிச்சம் பழம், சிறிதளவு தேங்காய்த் துண்டு.

laman Thedalweb உணவே மருந்து - மருந்தே உணவு ( Food is medicine - medicine is food )
செவ்வாய்க்கிழமை

வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு எலுமிச்சம் பழம், இஞ்சி, தேன் கலந்த சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். ஒன்பது மணிக்கு கேழ்வரகுப் புட்டு, வாழைப் பழம் அல்லது வேறு ஏதாவது ஒரு பழம், பதினோறு மணிக்கு கேரட்சாறு ஒரு டம்ளர் மட்டும். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், வாழைத் தண்டு, முருங்கைக் கீரை ஒரு கப், மிளகு ரசம் மற்றும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடலாம்.


மாலை நான்கு மணிக்கு எள், ஏலக்காய், வெல்லம் கலந்த எள் உருண்டை இரண்டு மற்றும் ஒரு கப் காய்கறி சூப். இரவு ஏழு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப்சாதம், வெந்தயக் குழம்பு அல்லது சீரகக் குழம்பு, இரவு படுக்கப் போகும் முன்பு பப்பாளி அல்லது மாம்பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம்.

siragan water Thedalweb உணவே மருந்து - மருந்தே உணவு ( Food is medicine - medicine is food )
புதன் கிழமை

வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு ஒரு டம்ளர் வேப்பிலை சாறு, மிளகு, சீரகம் கலந்து சாறு குடிக்கலாம். ஒன்பது மணிக்கு பைன் ஆப்பிள் சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு ஒரு டம்ளர் குடிக்கலாம். மதியம் ஒரு மணிக்கு ஒன்று அல்லது இரண்டு கப் சாதம், மிளகு ரசம், அகத்திக் கீரை, சுண்டைக்காய் கூட்டு, மாலை நான்கு மணிக்கு ஒரு டம்ளர் பாகற்காய் சூப் குடிக்கலாம். இரவு ஏழு மணிக்கு எலுமிச்சம் சாதம் ஒன்று அல்லது இரண்டு கப், பீட்ரூட் பொறியல், பேரிச்சம் பழம் இரண்டு சாப்பிடலாம்.

venpoosani Thedalweb உணவே மருந்து - மருந்தே உணவு ( Food is medicine - medicine is food )
வியாழக்கிழமை

வழக்கம்போல தண்ணீர் குடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு வெண் சணி சாறு ஒரு டம்ளர், ஒன்பது மணிக்கு வெண் பொங்கல் ஒரு கப், மிளகு, கறி வேப்பிலை துவையல். பதினோறு மணிக்கு ஏதாவது ஒரு பழம். மதியம் ஒருமணிக்கு ஒரு கப் கோதுமை சாதம், காய்கறி சாம்பார். பேரிச்சம் பழம் இரண்டு அல்லது ஏதாவது ஒரு பழம். மாலை நாலரை மணிக்கு வேக வைத்த சுண்டல் ஒரு கப் மற்றும் சுக்கு காப்பி, இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், பப்பாளித்துண்டு ஒரு கப் மற்றும் ஒரு டம்ளர் பால் மட்டும்.

arukupul Thedalweb உணவே மருந்து - மருந்தே உணவு ( Food is medicine - medicine is food )
ஞாயிற்றுக்கிழமை

வழக்கம்போல தண்ணீர். காலை ஏழு மணி – அருகம்புல், வேப்பிலை, தேன் கலந்த சாறு ஒரு டம்ளர், ஒன்பது மணிக்கு கேரட் சாறு ஒரு டம்ளர், காலை பதினோறு மணிக்கு கார அவல் ஒரு கப், இனிப்புப் பழங்கள் இரண்டு கப், காய்கறி சாலட் ஒரு கப், தேங்காய், பேரிச்சம்பழம் கலந்து சாப்பிடலாம். மாலை நான்கு மணிக்கு ஒரு சப்பாத்தி, காய்கறி ஒரு கப், ஏதாவது ஒரு பழம். இவ்வாறு அறுசுவை உணவுகளை உண்டுவந்தால் வாதம், பித்தம், கபம் சமநிலையிருந்து நோய்வராமல் நோய் எதிர்ப்புச்சக்தி தானாகவே கிடைக்கும். அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் மீன் வகைகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். கோழிக்கறி, இறால் மீன், கருவாடு வகைகள் உடம்பிற்கு சூட்டை ஏற்படுத்தி நோய் வர வழிவகுக்கும். அதை தவிர்ப் பது உடம்பிற்கு நல்லது.

tulsi tea1 Thedalweb உணவே மருந்து - மருந்தே உணவு ( Food is medicine - medicine is food )
வெள்ளிக்கிழமை

வழக்கம்போல காலையில் தண்ணீர் குடிக்கவேண்டும். காலை ஏழு மணிக்கு துளசிடீ, ஒன்பது மணிக்கு வெந்தயம் கலந்த இட்லி- நான்கு. மல்லி சட்னி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மதியம் ஒரு மணிக்கு பச்சை காய்கறிகள் இரண்டு கப், ஒரு கப் அவல் (தேங்காயு டன்), மாலை நாலரை மணிக்கு சுண்டல் ஒரு கப் அல்லது முளைகட்டின தானியம் ஒரு கப், ஒரு டம்ளர் கோதுமைப்பால், இரவு ஏழு மணிக்கு இரண்டு சப்பாத்தி, காய்கறி வேகவைத்தது ஒரு கப், ஏதாவது பழம்.

tea Thedalweb உணவே மருந்து - மருந்தே உணவு ( Food is medicine - medicine is food )
சனிக்கிழமை

தண்ணீர். காலை ஏழு மணிக்கு இஞ்சி, நல்ல வெல்லம், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய நீர் ஒரு டம்ளர். ஒன்பதுமணிக்கு பழத்துண்டுகள் கலந் தவை இரண்டு கப், மதியம் ஒரு மணிக்கு ஒரு கப் சாதம் அல்லது இரண்டு கோதுமை சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள் ஒரு கப், மோருடன் வெங்கா யம் ஊறவைத்தது ஒரு டம்ளர், அவரைக்காய், வாழைப் பொறியல் அல்லது கூட்டு, மாலை நான்கு மணிக்கு சாத்துக்குடி தேன் கலந்த சாறு ஒரு டம்ளர். இரவு ஏழு மணிக்கு ஏதாவது ஒரு பழம், துளசி குடிநீர் ஒரு டம்ளர் அல்லது பட்டினி இருக்கலாம்.

Leave a Reply