பருவமழை காலம் நெருங்கிவிட்டது. எப்போது மழை வரும் என்று தெரியாத நிலையில் தான் இருக்கின்றோம். மழைக்காலத்தில் ஜாலியாக மழையில் ஆட்டம் போட பலர் காத்திருக்கலாம். ஆனால், மழைக்காலத்தில் தங்களது கூந்தலை கவனிக்க மறந்துவிடாதீர்கள். ஏனென்றால், மழையில் நனைந்தாலும் சரி, நனையா விட்டாலும் சரி, மழைக்காலத்தில் கூந்தல் வறண்டு, பிசுபிசுப்பாக இருக்கும். முடி உதிர்வு, அரிப்பு, பொடுகு மற்றும் ஸ்கால்ப் பரு போன்ற பிரச்சனைகள் மழைக்காலத்தில் சாதாரணமாக ஏற்படக்கூடியவை. இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்த்திட சரியான கூந்தல் பராமரிப்பு அவசியம்

பெரும்பாலானோர் ஹேர் கண்டிஷ்னர் என்பது வறட்சி காலத்தில் மட்டுமே உபயோகிக்க சிறந்தது என்று நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல. எத்தகைய காலமானாலும் ஹேர் கண்டிஷனர் அவசியமான ஒன்று. அப்போது தான் கூந்தலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். ஹேர் கண்டிஷ்னரின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருப்பீர்கள். இப்போது, இயற்கை முறையிலான சில எளிய ஹேர் கண்டிஷனிங் முறைகள் பற்றி பார்ப்போம். சமையறையில் இருக்கும் ஏராளமான பொருட்களை வைத்தே பல்வேறு வகையான கூந்தல் பராமரிப்பு முறைகளை செய்ய முடியும்.

சில வழிகள்!

hairconditioner Thedalweb hair conditioner for monsoon hair care - மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா?
இயற்கை ஹேர் கண்டிஷ்னர்கள்

இயற்கை பொருட்கள் தான் கூந்தலுக்கு சிறந்த ஹேர் கண்டிஷ்னர்களாகும். நீங்கள் விளம்பரங்களை பார்த்தோ, பலர் சொல்வதை கேட்டோ, அதிலுள்ள பொருட்களை பற்றி பார்க்கலாம் வாங்கி உபயோகிக்கலாம். அப்படியெனில், உடனே நீங்கள் பயன்படுத்தும் கூந்தல் பராமரிப்பு பொருட்களில் பாருங்கள். அவற்றில், கேடு விளைவிக்கக்கூடிய பல்வேறு கெமிக்கல்கள் இருப்பதை பார்க்கலாம். அவை கூந்தலுக்கு நாள் கணக்கில் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தி வருகிறது என்பதை உணராமலேயே உபயோகித்து வருகிறீர்கள். சரி, இப்போது அதனை சரி செய்வதற்கான வழி என்னவென்று கேட்கிறீர்களா? அதற்கான ஒரே தீர்வு வீட்டிலேயே தயாரித்த ஹேர் கண்டிஷ்னர் தான். சமையறையில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே இதனை சுலபமாக செய்து விடலாம்.

eggwhite Thedalweb hair conditioner for monsoon hair care - மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா?
முட்டை மற்றும் தயிர்

பொலிவிழந்த கூந்தலுக்கு மீண்டும் பொலிவை கொண்டு வரவும், அனைத்து வகையாக கூந்தல் பிரச்சனைகளையும் விரட்டிடவும் முட்டை மற்றும் தயிர் கொண்டு செய்யப்பட்ட ஹேர் கண்டிஷனரை பயன்படுத்தலாம். இயற்கை முறையில் செய்யப்படும் இந்த கண்டிஷ்னர், கூந்தலுக்கு தேவையான புரதச்சத்தை கொடுப்பதோடு, பி.ஹெச். அளவை சீர்செய்ய உதவுகிறது. இதற்கு தேவையானது எல்லாம் தயிரும், முட்டையும் மட்டும்.
செய்முறை

* ஒரு பவுளில் 3 டீஸ்பூன் அளவிற்கு தயிரும், ஒரு முழு முட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் கூந்தலின் நீளத்திற்கு ஏற்றவாறு அளவை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம்.
* தயிர் மற்றும் முட்டையை நன்கு கலந்து கொள்ளவும்.
* இதனை கண்டிஷ்னராக பயன்படுத்துவதன் மூலம் முடி வெடிப்பு பிரச்சனைக்கு முடிவு கட்டிடலாம்.

aloevera Thedalweb hair conditioner for monsoon hair care - மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா?
கற்றாழை ஜெல் மற்றும் ஷியா வெண்ணெய்

கூந்தல் மிருதுவாக மாறுவதற்கும், பொலிவை பெறுவதற்கும் கற்றாழை ஜெல் மற்றும் ஷியா வெண்ணெய் பெரிதும் உதவக்கூடியது. அதுமட்டுமல்லாது, பொடுகு தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட்டு, முழு ஊட்டச்சத்தை பெற்று ஆரோக்கியமான கூந்தலை பெற இவற்றை பயன்படுத்தவும்.
செய்முறை

* 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் ஷியா வெண்ணெய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* வேண்டுமென்றால், இந்த கலவையுடன் உங்களுக்கு விருப்பமான நறுமண ஆயில் ஏதாவது 2 துளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
* தயார் செய்த கலவையை அரை மணிநேரத்திற்கு அப்படியே ஊற வைத்து பின்பு உபயோகிக்கவும்.
* இதை பயன்படுத்துவதால், கூந்தலுக்கு தேவையான ஈரப்பதம் கிடைப்பதோடு, முடியை மிருதுவாக்கி, அழகாக மாற்றிடும்.

acv Thedalweb hair conditioner for monsoon hair care - மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா?
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் உங்கள் தலைமுடியில் கண்டிஷ்னரின் அளவை குறைக்கும். உங்கள் தலைமுடியை அலசிய பிறகு ஆப்பிள் சீடர் வினிகரை கண்டிஷ்னராகப் பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடியை பொலிவாக வைத்திருக்க உதவும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து கொள்ளவும். வேண்டுமென்றால், அதில் லாவெண்டர் நறுமண ஆயிலையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த கலவையை உங்கள் கூந்தலில் தடவலாம்.

கெமிக்கல் நிறைந்த விலையுயர்ந்த ஹேர் கண்டிஷ்னரை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே இயற்கை முறையில் கண்டிஷ்னர் தயாரித்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. இவை ஆரோக்கியமான கூந்தலை தருவதோடு, அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளையும் விரட்டிவிடும்.

Leave a Reply