‘வேட்டுவம்’ பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, ‘சார்பட்டா 2’ படத்தினைத் தொடங்க ஆர்யா முடிவு செய்திருக்கிறார்.
தற்போது முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி அமைத்திருக்கிறார் ஆர்யா. இதனால் அதற்கு தகுந்தாற் போன்று கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ படத்தில் கவனம் செலுத்தி ஆர்யா. இதில் தினேஷ் நாயகனாக நடித்து வந்தாலும், ஆர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
‘வேட்டுவம்’ பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, ‘சார்பட்டா 2’ படத்தினைத் தொடங்க ஆர்யா முடிவு செய்திருக்கிறார். பா.இரஞ்சித் தயாரித்து, இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கவிருப்பதாக ஆர்யா குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, அடுத்தாண்டு சந்தானத்துடன் இணைந்து நடிக்க ஆர்யா முடிவு செய்திருக்கிறார். இதற்காக 3 இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வைத்துள்ளார். இதில் எந்தக் கதை பொறுத்தமாக இருக்கிறதோ, அதில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து இப்படம் உருவாக இருக்கிறது.

