அப்புறம் `சித்திரம் பேசுதடி’ கதையில நான் கதாநாயகியாக நடித்தால் நல்லா இருக்கும் நினைச்சுதான் கேரளாவுக்கு வந்து கதை சொன்னாங்க.” என ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் பற்றிய சில விஷயங்களை அவர் எடுத்துக் கூறினார்.
இதனை தாண்டி மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநர்கள் அனைவருடனும் பாவனா இணைந்துப் பணியாற்றியிருக்கிறார். அது குறித்து அவர், “ நான் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களான கமல் சார், ப்ரியதர்ஷன் சார், அமல் நீரத், அன்வர் ரஷீத்னு பலரோட வேலை பார்த்திருக்கேன்.

இப்போ `ரேகாசித்திரம்’ படத்துல கமல் சாரை பார்க்கும்போது எனக்குமே சப்ரைஸிங்காக இருந்தது. இவங்ககூட உதவி இயக்குநர்களாக பணியாற்றியவங்க இன்னைக்கு மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களாக இருக்காங்க. முக்கியமாக, இந்த சீனியர் இயக்குநர்களோட அனுபவத்துல இருந்து நம்ம சில விஷயங்கள் கத்துக்கலாம்.
ஒரு ப்ளான் இல்லைனா, இன்னொரு ப்ளான் அவங்ககிட்ட ரெடியாக இருக்கும்.” என்ற அவர், “ மம்மூக்கா, லாலேட்டன்னு ரெண்டு பேரும் லெஜெண்ட்.