இந்த நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில், ஏ.ஆர்.முருகதாஸின் விமர்சனத்துக்கு மறைமுகமாக பதிலளித்திருக்கிறார்.
அவர் பதிலில், “சிக்கந்தர் படத்தின் தோல்வியை நான் தோல்வி என ஒப்புக்கொள்ளமாட்டேன். சிக்கந்தர் ஒன்லைனாக சிறப்பான கதை. ஆனால், நான் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவேன் என இயக்குநர் முருகதாஸ் தெரிவித்திருந்தார்.
அதனால்தான் படம் தோல்வியடைந்ததாக கூறியிருக்கிறார். சமீபத்தில் அவரின் மதராஸி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் நாயகன் காலை 6 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிடுவார்.
அதனால்தான் அந்தப் படம் சிக்கந்தரை விட பிளாக் பஸ்டர் வெற்றி” எனச் சிரித்துக்கொண்டே கலாய்த்திருக்கிறார்.