சென்னை: கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது
நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். ‘அயோத்தி’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஹரீஷ் கண்ணன், இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின், எடிட்டராக ஆர்.சி.பிரனவ் பணியாற்றியுள்ளனர். இதன் டீசர் அண்மையில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.
’திருடி’ என்ற இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ஆஷிக் ஏஆர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ’தனியே நான் தவிச்சு நின்னேனே’ என்று தொடங்கும் இப்பாடல் கேட்பதற்கு இனிமையாகவும், காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.