"அனிருத் நிறைய செய்துவிட்டார். நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்"- சாய் அபயங்கர் |sai-abhyankar-about-anirudh-journey-and-his-journey

“அனிருத் நிறைய செய்துவிட்டார். நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்”- சாய் அபயங்கர் |sai-abhyankar-about-anirudh-journey-and-his-journey


தற்போது அவர் இசையமைக்கும் ‘பல்டி’ திரைப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செப்.18) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சாய் அபயங்கரிடம் ‘அனிருத்துக்கும் உங்களுக்கும் போட்டி என்று விமர்சிக்கப்படுகிறதே?’என்று கேள்வி கேட்கப்படுகிறது.

அதற்குப் பதிலளித்த அவர், “அனிருத் நிறைய செய்துவிட்டார். நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். எங்களுக்குள் போட்டி என்றெல்லாம் எதுவும் கிடையாது.

உங்கள் அனைவரது ஆசிர்வாதத்துடன் இன்னும் நிறைய உழைக்க விரும்புகிறேன். நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இதைத்தாண்டி போட்டி எதுவும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், “இப்போது இருக்கும் இயக்குநர்கள் அனைவரும் புதுமையை விரும்புகின்றனர். நான் புதிதாக எதையாவது முயற்சி செய்ய நினைத்தால் அதை மிகவும் விரும்புகின்றனர். அதை அனுமதிக்கின்றனர்.

ஆல்பத்தில் பணியாற்றுவதும், திரைப்படங்களில் பணியாற்றுவதும் ஒரே மாதிரி அனுபவமாகத்தான் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *